PDA

View Full Version : இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!



arun karthik
13-04-2013, 06:22 PM
அன்பை ஊட்டினாள்;
அன்னையை நேசித்தேன்....
அறிவை மூட்டினார்;
தந்தையை நேசித்தேன்...
வாழ்க்கைக்கு பொருள் அளித்ததால்
துணையை நேசித்தேன்...
வாழ்க்கைக்கு பொருள் அளித்ததால்
பணியை நேசித்தேன்...
மனதிற்கு இதம் தந்தது;
இசையை நேசித்தேன்...
காலத்திற்கும் இனிமை தந்தது;
கலையை நேசித்தேன்...

அருந்தமிழே!
எதற்காக உன்னை நேசித்தேன்;
எப்போது உன்னை நேசித்தேன்;
என்னுடன் என்னுள் நீ பிறந்ததாலா? இல்லை
உலகை அறிவதற்கு முன் உன்னை நான் அறிந்ததாலா?
நிச்சயம் நினைவில்லை;ஆனால்
நித்தமும் நேசிக்கிறேன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

prakash01
13-04-2013, 07:35 PM
நன்று. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் அருண் கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் நம் மன்ற உறவுகள் அனைவருக்கும்.

கும்பகோணத்துப்பிள்ளை
13-04-2013, 08:01 PM
தமிழ்ழன்னை என்றும் வாழ்த்துவாள் தமிழ(றிந்த)மன்ற நல்லோரை!
அந்நல்லோரை நாம் வாழ்த்துவோம் இத்தமிழ் புத்தாண்டில்
நீடுழி வாழ்கவென்று! நிரம்ப தமிழ் படைக்கவென்று!

சுகந்தப்ரீதன்
14-04-2013, 04:22 AM
அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!:icon_b:

கலைவேந்தன்
14-04-2013, 04:45 AM
நல்ல கவிதை. மன்றத்தின் மலர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிவா.ஜி
14-04-2013, 10:12 AM
தமிழன்னைக்கு கவி பாடிய அருண் கார்த்திக்குக்கும் மன்ற உறவுகளுக்கும் தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.