PDA

View Full Version : இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )nandagopal.d
09-04-2013, 01:22 PM
http://1.bp.blogspot.com/-bLrEApJdVXA/UVB5yXmELVI/AAAAAAAAAIk/bjg_0OoTWWc/s1600/images_50_1.jpg

வயதுக்கு வந்த நாள் முதல்
தொல்லையின் தொடக்கம்
எங்கும் பார்க்கப்படும் பார்வையில்
எல்லாம்,என் இதயத்தை
அவர்களின் கண்களுக்கு காட்டமாலே
விளையாடுகிறது.இளமை எனும் சதை துண்டு
எங்கோ இருந்து வந்தவன் எழுதிய
வெற்று காதல் காகிதம்,அதை படித்தவர்கள்
பிறப்பின் தொடக்கத்தில் தேவதை மஹாலட்சுமி என்று
கொஞ்சிய உதடுகள் (பெற்றவர்கள் )கூட
"குடும்ப மானத்தை வாங்காதே எங்கயாவது
கண் காணாத இடத்துக்கு போயிடு"இன்னும் இன்னும்
உள் நாக்கின் நீளம்தான் ஒரு சாட்டையாய்
அனலாக வீசப்பபட்டு அடித்து கொண்டு வரும் வார்த்தைகள்
வெறுமைக்கு தள்ளுகிறது என்னை :hmmm:

கூட்டத்தின் நடுவே குழப்பம்தான்
கும்மிருட்டில் மாட்டி கொண்டு அழும் குழந்தையாய் போல
சுற்றி உள்ளவர்களின்முகமூடியால்,
நல்லவர்களும் கெட்டவர்களும்,ஒரே மாதிரி
குழந்தையாய் கொஞ்சிய அக்கம் பக்கத்தவர்கள் கூட
பருவ கால செழிப்பை :O நெருஞ்சி முள்ளை போல் குத்துகின்ற
அவர்கள் பார்வையின் வக்கீரம்
என் உடலின் சதை துண்டுக்கு,

இன்னும் வாழ்வு இருக்கு என்று எண்ணி
திருமண வாழ்க்கையில் வருபவனாவது என்னை
புரிந்து கொள்வன்என்று,
ஏங்கிய காலங்கள் எல்லாம் ஏமாற்றி
நகைகளையும் என் புன்னகையும் ஒன்றாக சேர்த்து
அடமானம் வைத்து விட்டாவானாகி விட்டான் என்னவன்.
அடிக்கடி வேட்டையாடபடும் மிருகத்தை போல
வேட்டையாடபடுகின்றன என் சதை துண்டுகள்
எதையும் காதில் வாங்க வல்லவன் என்னவன்
தூக்கி எறியப்பட்ட கனவுகளுடனும்
கசக்கி பிழியும் கரும்பு சாறை போலவும்
கண்ணீரின் :cry2: இரவுகள் அவனுடன்
பூத்த நிறம் மாறும் கீழே விழும் பூக்களுக்கு
மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு?????

prakash01
09-04-2013, 03:52 PM
ஒரு சில பெண்களுக்கு நிகழும் அவலங்களை எடுத்துசொன்ன விதம் அழகு .
வாழ்த்துக்கள் . நன்று.

dellas
09-04-2013, 03:56 PM
நல்ல சோகம்..

எதிர்பார்ப்புகள் நியாயம்தான்.

பாராட்டுக்கள்.

கும்பகோணத்துப்பிள்ளை
09-04-2013, 06:22 PM
இது ஒரு கொடுமை!
இப்படியும் பல மனிதர்கள்!

பாராட்டுகள் நந்தகோபால்

கீதம்
09-04-2013, 11:49 PM
பெற்றவர்களிடத்திலேயே பெண்ணைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையும் இல்லாமை மிகவும் கொடுமை.

இந்நிலையில் மற்றவரைப் பற்றி என்ன கருத்து சொல்வது? அப்பெண்ணின் நிலை மிகப் பரிதாபம்தான்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

இராஜிசங்கர்
10-04-2013, 05:15 AM
வளர்ச்சி என்பது நமக்குச் சாதகமானதா?

வளர்ச்சி என்றாலே ஏதோ ஒன்றை இழந்துவிட்டு ஏதோ ஒன்றை பெற்றதன் குறியீடு தானே!

* அப்பாவை பேருந்து நிறுத்தத்தில் பார்த்த மாத்திரத்தில் கட்டிக் கொள்ள முடிவதில்லை.

* ​அம்மாவுடன் கடைக்குச் செல்ல முடிவதில்லை.

* தங்கையுடன் ஓடிப் பிடித்து விளையாட முடிவதில்லை.

* தனியிரவில் அண்ணனுடன் சைக்கிளில் செல்ல முடிவதில்லை.

* தெருவில் நடந்து கொண்டே லாலிபப் சப்ப முடிவதில்லை.

* நண்பனின் கைப் பிடித்து நடக்க முடிவதில்லை.

* சத்தம் போட்டு அழக் கூட முடிவதில்லை.

அத்தனை அடக்குமுறைகளுக்கும் ஒரே காரணம் - 'நீ பெரிய பொண்ணா வளர்ந்துட்ட..இனி பொறுப்பா நடந்துக்கணும்'

பெரிய பெண்ணாகி இழந்ததன் பட்டியல் நீளமானது. என்ன பெற்று விட்டோம் சுமைகளைத் தவிர, சுகங்களாய்?

வாழ்த்துக்கள் நந்தா..

ஜான்
10-04-2013, 02:35 PM
மிகுந்த வீரியமும் கனமும் தீவிரமும் செறிவும் மிகுந்த வார்த்தைகள்

இன்னும் கொஞ்சம் கொஞ்சம் செதுக்கல் நீக்கல் கொண்டு படித்திருந்தால் மிக மிக சிறந்த ஒரு கவிதையாக உருவாகியிருக்கும் !

மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு????? கேள்விக்கு பதில்இல்லை