PDA

View Full Version : என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ

arun karthik
06-04-2013, 04:19 PM
அடி பவள முகக்காரி... என்னை பாரு சிங்காரி...
என் ஊர்வலத்தின் தேரு , என்றும் அழகிய மேரு...
சிவப்பு சொக்கா போட்டு வாரேன் நிக்க மாட்டியா? - நானும்
பட்டு சொக்கா தெச்சு தாரேன் பாக்க மாட்டியா?
என் கண்ணுக்குள்ள உன் கண்ணா கோர்க்க மாட்டியா ?
உன் சிரிப்புல தான் என்ன கொஞ்சம் ஈர்க்க மாட்டியா ?
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

பள்ளிக்கூடம் நடந்து போகும் பஞ்சு மிட்டாயே...
பாதையில், நெருஞ்சி முள்ளு வெளஞ்சிருக்கும் நஞ்சு பட்டாலே..
மாமன் கை மேல நடக்க தயங்குகிறாயே - என்
கடிதம் சொன்ன காதலுல மயங்குகிறாயே ..

ஆசஅய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

திருவிழா கூட்டத்துல தேவதை பார்த்தேன் -என்
அய்த்த கூட பயந்து நடந்த கோலத்தில் பார்த்தேன் - நானும்
கம்பு சுத்த களமிறங்கும் காளையே - ஆனா
உன்ன சுத்தி தலம் களிக்க வந்தேனே!
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச அய்த்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

போன வாரம் சந்தையில காதல சொன்னேன் - நீயும்
கொல்லுன்னு சிரிச்சு என்ன அழகுல கொன்னே!
கல் நெறஞ்ச காட்டில் நானும் நடந்து பாக்கறேன் - நீ
கூட வந்ததால காட்ட கடந்து பாக்கறேன்....

ஜான்
07-04-2013, 02:30 AM
வாசித்துப் பார்க்க சுவையாக இருக்கிறது அருண்கார்த்திக்

ஆனால் அத்தை மகள்கள் இப்போதெல்லாம் ஐஸ்வர்யா என்றுதான் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்!

கும்பகோணத்துப்பிள்ளை
07-04-2013, 01:24 PM
அடி பவள முகக்காரி... என்னை பாரு சிங்காரி...
என் ஊர்வலத்தின் தேரு , என்றும் அழகிய மேரு...
சிவப்பு சொக்கா போட்டு வாரேன் நிக்க மாட்டியா? - நானும்
பட்டு சொக்கா தெச்சு தாரேன் பாக்க மாட்டியா?
என் கண்ணுக்குள்ள உன் கண்ணா கோர்க்க மாட்டியா ?
உன் சிரிப்புல தான் என்ன கொஞ்சம் ஈர்க்க மாட்டியா ?
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச ஐத்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

பள்ளிக்கூடம் நடந்து போகும் பஞ்சு மிட்டாயே...
பாதையில், நெருஞ்சி முள்ளு வெளஞ்சிருக்கும் நஞ்சு பட்டாலே..
மாமன் கை மேல நடக்க தயங்குகிறாயே - என்
கடிதம் சொன்ன காதலுல மயங்குகிறாயே ..
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச ஐத்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

திருவிழா கூட்டத்துல தேவதை பார்த்தேன் -என்
ஐத்த கூட பயந்து நடந்த கோலத்தில் பார்த்தேன் - நானும்
கம்பு சுத்த களமிறங்கும் காளையே - ஆனா
உன்ன சுத்தி தலம் களிக்க வந்தேனே!
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச ஐத்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

போன வாரம் சந்தையில காதல சொன்னேன் - நீயும்
கொல்லுன்னு சிரிச்சு என்ன அழகுல கொன்னே!
கல் நெறஞ்ச காட்டில் நானும் நடந்து பாக்கறேன் - நீ
கூட வந்ததால காட்ட கடந்து பாக்கறேன்....
என் அத்த மக அருக்காணி அருகில் வா நீ - உன்
ஆச ஐத்தான் நான் தானே அழைக்கிறேன் தேனீ....

என்ன சினிமாவுல பாட்டெழுதும் ஆசையுண்டா!

போன வாரம் சந்தையில காதல சொன்னேன் - நீயும்
கொல்லுன்னு சிரிச்சு என்ன அழகுல கொன்னே!
கல் நெறஞ்ச காட்டில் நானும் நடந்து பாக்கறேன் - நீ
கூட வந்ததால காட்ட கடந்து பாக்கறேன்....

என்ற வரிகளின் கருத்தும் சந்தமும் அருமை!

ஜான்
09-04-2013, 02:13 AM
நன்றி sarcharan

dellas
09-04-2013, 04:03 PM
ம்ம்..அதிரட்டும் மேளங்கள்..

பாராட்டுக்கள் ..நல்லதொரு கிராமத்து கானா..

கீதம்
09-04-2013, 11:53 PM
அத்தை மகளிடம் காதலை இறைஞ்சும் கிராமியக் காதலனின் பாடல் ரசிக்கவைக்கிறது. ஐத்தான், ஐத்த போன்ற வார்த்தைகளை அய்த்தான், அய்த்த என்று எழுத இன்னும் ரசிக்கும் என்று தோன்றுகிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

arun karthik
21-04-2013, 03:15 PM
நீங்கள் சொல்வதும் சரிதான் ஜான்...
என்ன செய்ய கிராமத்து கவிதைகளுக்கு அருக்காணியை போல்
எவ்வளவு அழகான ஐஸ்வர்யாக்களும் பொருந்துவதில்லை...

arun karthik
21-04-2013, 03:19 PM
என்ன சினிமாவுல பாட்டெழுதும் ஆசையுண்டா!

என்ற வரிகளின் கருத்தும் சந்தமும் அருமை!

நீண்ட நாட்களாக கிராமத்து சாயலில் ஒரு பாடல் வடிக்க ஆசை... அதான்..
வேற ஒன்னும் இல்லீங்கோ....

arun karthik
21-04-2013, 03:20 PM
அத்தை மகளிடம் காதலை இறைஞ்சும் கிராமியக் காதலனின் பாடல் ரசிக்கவைக்கிறது. ஐத்தான், ஐத்த போன்ற வார்த்தைகளை அய்த்தான், அய்த்த என்று எழுத இன்னும் ரசிக்கும் என்று தோன்றுகிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

இதோ இப்போதே பிழைகளை களைந்து விடுகிறேன்....

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 12:43 PM
கிராமிய மணம் இன்று காற்றில் கரையும் மணம் போல் காணமல் போய் கொண்டிருக்கிறது..மாறுபட்ட ரசனை..