PDA

View Full Version : ஒரு கவிதை



maniajith007
03-04-2013, 01:59 PM
எல்லோரும்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்,
எல்லோருக்கும்
ஏதேனும் இருக்கிறது
விரைந்து செல்ல ,
அலுவலகம்
அல்லது வீடு ,
இல்லையென்றாலும்
இருக்கிறது ஏதோ ஒன்று,
எவர் குறித்தும்
எவருக்கும்
எதுவுமில்லை,
எவருக்கும் ஏதேனும்
நிகழ்ந்தால்
அன்றைய விவாதத்தில்
அவர் பெயரே எரிபொருள்,
சிலர் தங்களுக்குள்
சலசலத்து கொண்டனர்,
சிலர் நித்தியத்தை
கொண்டதாய் பறையடித்தனர்,
அந்த கந்தலாடை
சிறுமி
மரத்தின் உதிர்
மஞ்சள்
மலர்களை கையிலெடுத்து,
புன்னகைத்து முத்தமிட்டு
தழுவியபோது ,
பெருமூச்சுடன்
உயிர்த்தெழுந்தது,
எல்லா தெய்வங்களும்
பிரபஞ்சமும் ,

சுகந்தப்ரீதன்
04-04-2013, 05:55 PM
வெளுத்துவாங்கும் வெயிலுக்கிடையே இளைப்பாற ஆங்காங்கே இயற்கை அமைத்த இளந்தளிர்சோலையாய்... வாழ்வில் சில காட்சிகவிதைகள்..!!:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
04-04-2013, 06:57 PM
என்பதுகளில் தி நகர் துரைசாமிப்பாலத்தில் உட்கார்ந்திருந்து விட்டு
சட்டுன்னு மாம்பலத்துக்குள்ள நுழைஞ்சமாதிரியிருந்தது!

பாலத்துக்கு அடியில் சர் சர்னு போறவய்ங்க வர்றவய்ங்களையெல்லாம்
சாடர்னு நிப்பாட்டி அடேய்! எங்கடா இப்படி அவசர அவசரமாய் போறிங்கனுட்டு கேட்கனும்போல இருக்கும்!
அவசர அவசரமாய் மாறிடிச்சன்னே இப்பெல்லாம்!

குழந்தைகள் உலகமட்டும் மாறேவேயில்லேண்னே! கடவுள் வாழும் கோயில்ண்னே அது!

maniajith007
05-05-2013, 06:26 AM
நன்றி உறவுகளே மிக்க நன்றி