PDA

View Full Version : ஏன் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுவதில்லை..

மன்மதன்
14-01-2004, 09:05 AM
அது மாணவர்களின் தவறு கிடையாது, அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடப்பதில்லை..வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது ஒரு பெரிய குறை..

உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்விஆண்டை எடுத்துக்கொள்வோம்..

1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்.. மற்ற நாள்கள் 313

2.கோடை விடுமுறை 50 . ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம் மீதி 263 நாள்கள்.

3. தினமும் 8 மனி நேரம் தூங்கும் நேரம் என்பதால் (கூட்டினால் 122 நாட்கள் வருகிறது). மீதி 141 நாட்கள்.

4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் . வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள். மீதி 126 நாட்கள்.

5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்.. 30 நாள்கள். மீதி 96 நாட்கள்.

6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம். நிறைய பேசினால் நிறைய கத்துகலாம்..15 நாள் வருகிறது. மீதி 81 நாட்கள்.

7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்..

8. காலாண்டு,அரையாண்டு,பண்டிகை தினம் விடுமுறைகள் 40 நாட்கள்.. மீதி 6 நாட்கள்.

9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைத்தது 3 நாட்கள் .. மீதி 3 நாட்கள்.

10. சினிமா, உறவினர் திருமணம்,விழாக்கு 2 நாள் போய்விடும்.. மீதி இருப்பதோ ஒரேயொரு நாள்.

11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..

பின்ன எப்படி தேர்வில் வெற்றி பெறமுடியும்.....

poo
14-01-2004, 11:51 AM
சூப்பரா சொன்னீங்க மதன்....

அறிஞர்
15-01-2004, 06:51 AM
இந்த கால்குலேசனை.. வேறு வகையில். படித்த நியாபகம்...

இங்கு.. இப்படி சொல்லி நண்பர் கலக்குகிறார்

இளசு
15-01-2004, 09:35 PM
அதானே மன்மதன்...
சரியாக் கணக்கு போட்டுச் சொன்னீங்க..

இன்னும் பகல்கனவில் மூழ்கும் நேரத்தையும் கணக்கிலெடுத்தால்
மைனஸில் போய் நிக்கும் போலிருக்கே..

இரசித்தேன்..பாராட்டுகள்..

aren
22-01-2004, 04:21 AM
எப்படித்தான் நம் மக்கள் இந்த ஒரு நாளில் அதுவும் அவர்களுடைய பிறந்த நாளில் இத்தனை சாதனைகள் செய்கிறார்களோ. பாராட்டப்பட வேண்டியவர்கள் நம் மக்கள்.

மகளீர் அணி கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

gankrish
22-01-2004, 09:08 AM
சூப்பர் மன்மதா சூப்பர். இதே போல் மாணவிகளுக்கும் எழுதலாமே.. (உத. ஷாப்பிங்... டிரெஸ்ங்.. etc...)

aren
22-01-2004, 10:44 AM
சூப்பர் மன்மதா சூப்பர். இதே போல் மாணவிகளுக்கும் எழுதலாமே.. (உத. ஷாப்பிங்... டிரெஸ்ங்.. etc...)

எழுதாமலா இருக்கப் போகிறார்கள். நிச்சயம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

பரஞ்சோதி
25-01-2004, 04:57 PM
நண்பர் மன்மதரே! அற்புதமான கணக்கு, இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஏன் படிக்கவில்லை, முதல் மாணவன் ஏன் ஆகவில்லை என்று கேட்டு அடித்த அம்மாவிடம் காட்டியிருப்பேன், அடியில் இருந்து தப்பியிருப்பேன்.

அறிஞர்
26-01-2004, 06:23 AM
நண்பர் மன்மதரே! அற்புதமான கணக்கு, இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஏன் படிக்கவில்லை, முதல் மாணவன் ஏன் ஆகவில்லை என்று கேட்டு அடித்த அம்மாவிடம் காட்டியிருப்பேன், அடியில் இருந்து தப்பியிருப்பேன்.

ஏன் அவ்வளவு அடிவாங்கிதான். படித்தீர்களா

மலர்
30-05-2008, 04:40 PM
ஆஹா.....
என்ன ஒரு அருமையான அட்டவணை...
அப்பிடியே பிரேம் போட்டு வீட்டுல அப்பா பாக்குற
இடத்துல மாட்டி வைக்கணும் போல கை கை துருதுருன்னு வருதே.. :icon_rollout: :icon_rollout:

மம்மு சொல்ற மாதிரி வருடத்தில வெறும் 365 நாளு இருக்குறது தான் பிரச்சனையே.. :D :D இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தா படிக்க கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கும்..... :rolleyes: :rolleyes:

மம்மு உங்களுக்கு மட்டும் எப்பிடி இப்பிடி
எல்லாம் தோணுது...... :traurig001: :traurig001: :traurig001:.. மலருக்கும் கொஞ்சம் கத்து குடுக்குறது...... :frown: :frown: :frown:

அமரன்
30-05-2008, 04:56 PM
மன்மி..
டூ...... லேட்டா பதிஞ்சிருக்கீங்க.. டூ லேட்டா படிச்சிருக்கேன். யூஸ் பண்ண முடியலையேப்பா...

மம்மு உங்களுக்கு மட்டும் எப்பிடி இப்பிடி
எல்லாம் தோணுது...... :traurig001: :traurig001: :traurig001:.. மலருக்கும் கொஞ்சம் கத்து குடுக்குறது...... :frown: :frown: :frown:
தோணுவதுக்கு இருக்கனும்ல. அப்புறம் எப்படிக் கத்துகுடுப்பது.

மன்மதன்
31-05-2008, 09:09 AM
மன்மி..
டூ...... லேட்டா பதிஞ்சிருக்கீங்க.. டூ லேட்டா படிச்சிருக்கேன். யூஸ் பண்ண முடியலையேப்பா...

இது மலர் மாதிரி பெரியவங்க சொல்றது..:rolleyes:
நம்மள மாதிரி ஸ்டண்ட்ஸே
இப்படி சொன்னா..எப்படி:D:D

உதயசூரியன்
31-05-2008, 09:16 AM
இந்த கால்குலேசனை.. வேறு வகையில். படித்த நியாபகம்...

இங்கு.. இப்படி சொல்லி நண்பர் கலக்குகிறார்

அதே அதே..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

நேசம்
31-05-2008, 01:20 PM
இதை படித்த பிறகு கவலை போய்விட்டது.நன்றி மன்மதன்

சூரியன்
01-06-2008, 06:35 AM
நானும் இதே அட்டவனைதான் பின்பற்றினேன்.:mini023: