PDA

View Full Version : பேருந்து - ஹைக்கூ



M.Jagadeesan
01-04-2013, 10:06 AM
குளிர்சாதனப் பேருந்தில்
குப்பென்று வியர்த்தது
கண்டக்டரிடம் சில்லரை பாக்கி !

M.Jagadeesan
01-04-2013, 12:37 PM
இறங்குமிடம் வருகின்ற வரையில்
இருப்புக் கொள்ளவில்லை-
மகளிர் இருக்கையில் நான்.

M.Jagadeesan
01-04-2013, 12:43 PM
" படிக்கட்டுப் பயணம் பரலோகப் பயணம். "
படிக்கட்டில் பயணம் செய்தபடி
டிக்கெட் வாங்கினான் ஒருவன்.

இராஜிசங்கர்
02-04-2013, 05:37 AM
குளிர்சாதனப் பேருந்தில்
குப்பென்று வியர்த்தது
கண்டக்டரிடம் சில்லரை பாக்கி !

குளிர்சாதனப் பேருந்தில் சில்லறை பாக்கி வர வாய்ப்பேயில்லை. கட்டணம் முழு நோட்டு தான் இங்கே(பெங்களூரில்)!