PDA

View Full Version : காவடிச் சிந்திலே காதலி.



M.Jagadeesan
29-03-2013, 04:38 AM
முழுநிலா போன்றதொரு முகமே !- அதைப்
பார்ப்பதில் தோன்றும் தனிசுகமே !- இந்த
ஜெகத்தினில் அவளழகை
வெல்லுகின்ற பெண்ணொருத்தி
இல்லையே !- சொல்லு கிள்ளையே !

கற்றைக் குழலில் மணம் வீசும்- முல்லைப்
பற்களைக் கண்டு கண்கள் கூசும்- அவள்
கன்னமதில் தோன்றுகின்ற
குழியிலே நான்விழுந்து
தவிப்பேன் !-இன்பம் குவிப்பேன் !

கிடக்கும் நெற்றியிலே சுட்டி- நித்தம்
காலில் ஒலியெழுப்பும் மெட்டி- அவள்
நடக்கும் நடையழகைக்
காணவே கண்கள்கோடி
வேணும்-அன்னம் நாணும் !

பாம்பினை ஒத்ததொரு சடையே !-தேடிப்
பார்க்கினும் கிடைக்காத இடையே !-மலர்க்
காம்பினை அகற்றாது
பூக்களைச் சூடினாலும்
எரியும்- இடை முறியும்.

தங்கத்திலே வார்த்தெடுத்த பதுமை- இந்தத்
தரணியில் காணாத புதுமை-கடல்
வங்கத்திலே விளைகின்ற
முத்தெடுத்து திருமணத்தை
முடிப்பேன்-கரம் பிடிப்பேன்.

கன்னல்சுவை வெல்லுகின்ற மொழியே !- அவள்
காதலைச் சொல்லுமந்த விழியே !- அந்த
முன்னழகை வெல்லுகின்ற
பின்னழகைக் காணும்போது
மறப்பேன்- உயிர் துறப்பேன் !

கம்பநாடன் பாடிவைத்த சீதை- தந்த
கற்புநெறி அவள்கொண்ட பாதை- மலர்
அம்பெடுத்து மன்மதன்
கோடிமுறை தொடுத்தாலும்
மனையாள்- பிறரை நினையாள்!

prakash01
29-03-2013, 06:32 AM
அழகான காதல் கவிதை ஐயா வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
30-03-2013, 03:51 AM
பிரகாஷ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

சுகந்தப்ரீதன்
31-03-2013, 07:31 PM
அடடா... இளமைக்கேயுரிய நளினம் எப்படித்தான் வாய்க்கிறதோ தங்கள் கவிவரிகளுக்கு...
உண்மையிலியே உங்களை பார்த்து பொறாமையாவும் பெருமையாவும் இருக்குய்யா....:icon_b:

M.Jagadeesan
01-04-2013, 02:03 AM
தங்களின் மனம்திறந்த பாராட்டுக்கு நன்றி சுகந்தப்ரீதன்.

கீதம்
19-04-2013, 02:43 AM
சரளமாய் வந்து விடும் தமிழின் சொல்வளத்தையும் கவிநயத்தையும் கண்டு வியக்கிறேன். காவடிச்சிந்திலே காதலியை வர்ணித்த விதம் காவடிச்சிந்தையே காதலிக்கத் தூண்டுகிறது. தங்கள் பன்முகத் திறமைக்கு இது இன்னுமொரு சான்று. மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
25-08-2014, 02:41 PM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

Sabeekshana
26-08-2014, 11:14 AM
மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ஐயா தம் மனையாளின் ரஞ்சகத்தை.

அவர் நிச்சயம் ஒரு அதிஷ்ட சாலி தம்மை போன்ற ஒரு கணவனை அடைந்ததற்கு.

வாழ்த்துக்கள்

M.Jagadeesan
27-11-2014, 12:53 PM
சபீக்ஷனா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.