PDA

View Full Version : இறுதி விசும்பல்கள்..!



பூமகள்
29-03-2013, 03:44 AM
இறுதி விசும்பல்கள்..!




விழும்புகளின் விசும்பல்கள்
கேட்பதே இல்லை யாருக்கும்..


உயிரோசைகளின் சத்தமெல்லாம்
மலையுச்சியின் விழும்பின்
காதுமடலெங்கும் ஒலித்தொலித்து
மரத்துக்கிடக்கின்றன..
குயிலோசை கூட அறியாதபடி..


மரத்தின் உச்சிக்கொம்பெங்கும்..
இளந்தளிர்களின் ஓசை
புரிவதே இல்லை அதிலேறும்
குரங்குகளுக்கும் குருவிகளுக்கும்..
கிளை முறிந்து விழும் தருணங்களை
நடுங்கியபடி எதிர்கொள்கின்றன அவை..


இறுதிக் கணங்களின்
சுமையான படுக்கையின்
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்
புரிவதே இல்லை யாருக்கும்..
தன் மரணம் வரும்வரையிலும்..

கீதம்
29-03-2013, 04:50 AM
இறுதிக் கணங்களின்
சுமையான படுக்கையின்
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்
புரிவதே இல்லை யாருக்கும்..
தன் மரணம் வரும்வரையிலும்..

சத்தியம் சுமந்துநிற்கும் வரிகள்!

தன் மரணம் வரையிலும் அறிந்துணர இயலாத அன்றைய பல இறுதி விசும்பல்களைப் பற்றிய ஞானோதயம் கூட இன்றைய இறுதி விசும்பல்களின் வேதனையை ஆழமாய்க் கூட்டக்கூடும். அருமை பூமகள்.

சிறு சந்தேகம் பூமகள்... விழும்பு குறிப்பது விளிம்பைத்தானோ?

கும்பகோணத்துப்பிள்ளை
29-03-2013, 08:32 AM
உயிர் வாழும் காலமெல்லாம்
உள்விழுங்கும் கண்ணிர்துளிகலொம்
உயிர் விடும் தருணமேனும்
தலையணை விசும்பல்களாய்
தனிமையில் கரையும்!


அருமையான விடையம் என்பதைவிட ஆழமான விடையம்!

அடுத்தவர் படுதல்கள் பற்றி கவலை படாதவர்கள்
அவர்களின் இறுதிநாட்களில் தன்னிரக்கத்தில்
தவிக்க நேர்ந்தாலும் தன்னால் அடுத்தவர் அடைந்த துயர்களை என்னிப்பார்க்கவியலும் என்பது சந்தேகத்துக்குரிய விடையம்.

சிந்தனையைத்துண்டும் விளிம்பு!