PDA

View Full Version : உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே



ஆதி
25-03-2013, 06:41 AM
ஒரு அழகான மயிலிறகாய் நாளும்
என் கனவின்
காற்று திசையில் பறந்தவளே
உன்னுடனான சந்திப்பு நிகழ்ந்த*
இத்தருணத்தின் மலர்வில்
சாயமிழக்கிறது
செறிந்த தனிமை

இன்னும் தெரிவிக்காத*
அல்லது நீ அறியாத*
எனது பேரன்பின் வெளியில்
உனக்காகவே
துளிர்ப்பதற்கு காத்திருக்கிறது
எண்ணற்ற மழைகாலங்கள்

காய்தலற்ற பசுமையோடும்
வண்ணத்துப் பூச்சிகளின் பறத்தலோடும்
பனி படர்ந்த
குளிர்ந்த புல்வெளியை
உனக்காகவே
விரித்து வைத்திருக்கிறது மனது


மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான*
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை

சுகந்தப்ரீதன்
05-04-2013, 03:02 PM
செறிவான வார்த்தையுளிக்கொண்டு செதுக்கிய உணர்வுச்சிற்பமாய் இக்கவிதை..!!:icon_b:

ஆதி... கொடுத்துவைத்தவள்தான் அந்த கொங்கணிபெண்...:)

கீதம்
10-04-2013, 12:35 AM
மயிலின் வரவுக்காய்க் காத்திருக்கும் மழைக்காலத்தின் கவிதைகள் மழை முந்தி மனம் நனைக்கின்றன!

காத்திருப்பின் கால அவகாசம் விரைவில் கரையட்டும்! கையிருப்பில் கனக்கும் கனவுக்காதலும் அதில் கரையட்டும்!

பாராட்டுகள் ஆதி.