PDA

View Full Version : வருகிறபோது வரட்டும்......



Nanban
13-01-2004, 03:30 PM
வருகிறபோது வரட்டும்...........

சாத்திய கழிவறையினுள்
சிகரெட் புகைத்தாயிற்று -
ரகசியமாக.

குடுவை நிறைய
மசாலா டீயும் ரெடி...

மெல்லிய இசையும்
படர்ந்து இழைகிறது...

எல்லா விளக்குகளும்
அணைக்கப்பட்டு விட்டது
கூடவே மனிதர்களும் தான்...

கணிணி திரையும்
ஒளிர்ந்து
காத்திருக்கிறது.

இனி எழுத வேண்டியது தான்
பாக்கி...

எழுத்துகளை
வார்த்தைகளை
வாக்கியங்களை...

கவிதை
வருகிறபோது வரட்டும்...........

இளசு
13-01-2004, 11:36 PM
அட, வரும்போது வரட்டும் எனும்போதே வந்துவிட்டதே..

காதலும் கவிதையும் பட்டாம்பூச்சிகள்..
தேடும்போது ஓடும் கண்ணாமூச்சிகள்..
திரும்பும்போது தோளில் அமரும் இன்ப ராட்சசிகள்..
காதல் வந்தால் இருவருக்கு..
கவிதை வந்தால் மன்றத்துக்கு..

பாராட்டுகள் நண்பன் ..இந்த ராத்திரி ராட்சசியைப்
பிடித்து வடித்துக் கொடுத்தமைக்கு..

Nanban
14-01-2004, 04:17 AM
நிறைய முறை சில நல்ல வரிகள் தோன்றும். அடித்துப் பிடித்து, பேப்பர், பேனா, அல்லது கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டுப் பார்த்தால், என்ன தோன்றியது என்பதே மறந்து விடுகிறது. எத்தனை யோசித்தாலும் மீண்டும் அது தோண்றுவதில்லை.

மாறாக எழுத வேண்டும் என்று எல்லா முன்னேற்பாடுகளுடன், உட்கார்ந்தால், எதுவும் வருவதில்லை..........

நிறைய முறை எதுவுமே தோன்றாமல், நிறைய உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். பின்னர் எடிட் செய்து கொள்ளலாம் என்று.

வெகு அபூர்வமாகத் தான் நினைத்த பொழுது எழுதியதெல்லாம் நல்ல கவிதைகளாக வந்திருக்கின்றன........

(மிகப் பெரிய தொல்லை - கார் ஓட்டும் பொழுது, தோன்றும் சிந்தனைகள்...... வண்டியை நிறுத்தியதும், மனம் சுத்தமாக, மழை பெய்து ஓய்ந்த நகரத்து சாலைகள் போல சுத்தமாக இருக்கும்.......)

Mano.G.
14-01-2004, 10:23 AM
நிறைய முறை சில நல்ல வரிகள் தோன்றும். அடித்துப் பிடித்து, பேப்பர், பேனா, அல்லது கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டுப் பார்த்தால், என்ன தோன்றியது என்பதே மறந்து விடுகிறது. எத்தனை யோசித்தாலும் மீண்டும் அது தோண்றுவதில்லை.

மாறாக எழுத வேண்டும் என்று எல்லா முன்னேற்பாடுகளுடன், உட்கார்ந்தால், எதுவும் வருவதில்லை..........

நிறைய முறை எதுவுமே தோன்றாமல், நிறைய உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். பின்னர் எடிட் செய்து கொள்ளலாம் என்று.

வெகு அபூர்வமாகத் தான் நினைத்த பொழுது எழுதியதெல்லாம் நல்ல கவிதைகளாக வந்திருக்கின்றன........

(மிகப் பெரிய தொல்லை - கார் ஓட்டும் பொழுது, தோன்றும் சிந்தனைகள்...... வண்டியை நிறுத்தியதும், மனம் சுத்தமாக, மழை பெய்து ஓய்ந்த நகரத்து சாலைகள் போல சுத்தமாக இருக்கும்......

இதுதான்யா நானும் அனுபவிக்கறது
திடீர்னு கருத்துக்கள் கற்பனைகள் அதுவும் காரை செலுத்தும் பொழுது
வரும் சரி போனவுடன் எழுதிக்கலாம்னு ஒரு யோசனை ஆனா சேரும் இடம்
வந்ததும் மண்டைய போட்டு உடைச்சிகனும் ஞாபகமே வராது, கணனி முன்னால் உட்கார்ந்தாள் அறவே வராது.


மனோ.ஜி

kavitha
23-01-2004, 07:07 AM
மண்டைய போட்டு உடைச்சிகனும் ஞாபகமே வராது, கணனி முன்னால் உட்கார்ந்தால் அறவே வராது.


தோழர்களே, காரில் பதிவு செய்ய ஒலி நாடா பொருத்திவிடுங்கள்.
நண்பர்கள் அருகில் இருந்தால் 'டெலிபோன் டைரக்டரி'யிலாவது குறிக்க(கிறுக்க) சொல்லிவிடுங்கள். (உங்கள் சரளமான கற்பனைகள் வீணாகக்கூடாது)

அமரன்
29-10-2007, 09:35 PM
ஹி...ஹி...நமக்கும் அப்படித்தானுங்கோ. உங்களுக்கு ஓரளவாவது பரவாயில்லை. தாளில் எழுத வருகிறது. எனக்கு தாளை விரித்துவிட்டு சிந்தனையை விரித்தால் நனைந்த கோழிக்குஞ்சுபோல முடங்குகிறது. கணினித்திரை சிரிப்பு நிலையில் இருக்கும்போது சொல்ல வேண்டியதை சொல்லலாம் என்றால் உள்ளம் அழுகிறது. எதையாவது பார்த்த கணத்தில், ஏதாவாது உதயமாகும்.. நிதானித்துவிட்டு நினைவில் கொண்டுவர முனைந்தால் வினையாகி இம்சிக்கும்.. கணினி சிரிக்கும்போது மன்ற சிரிப்புப் பகுதியில் சிரிப்புக்கு நன்றி சொல்லலாம் என்றால் அந்த நேரம் பார்த்து தொப் என்று குழந்தை வந்து விழும். ஹும்..என்னதான் செய்வது? இந்த நிலைமையை எனக்கு அருளிய மன்றத்துக்கு என்ன செய்து பட்ட கடனை அடைப்பது?

அறிஞர்
29-10-2007, 10:07 PM
எண்ணங்கள் தோன்றும்போது
உடனே வரிகளாய் வடிப்பவர்கள்..
சிறந்த கவிஞர்களாக உருவெடுக்கிறார்கள்..