PDA

View Full Version : காதல் செய்யாதது குற்றமே !



M.Jagadeesan
18-03-2013, 03:59 AM
எதற்கும் இருக்கட்டுமே என்று
இரண்டு பேனாக்கள் வாங்கினேன்
ஒன்று பழுதானால் மற்றொன்று.

எதற்கும் இருக்கட்டுமே என்று
இரண்டு ஜோடி செருப்பு வாங்கினேன்
ஒன்று களவு போனால் மற்றொன்று.

எதற்கும் இருக்கட்டுமே என்று
இரண்டு கணினிகள் வாங்கினேன்
ஒன்று கைவிட்டால் மற்றொன்று.

ஆனால்

காதலித்த பின்பு கைவிட்டு என்னெஞ்சைப்
பேதலிக்கச் செய்து மற்றொருவன் கழுத்தினிலே
மாலையிட்டு என்மனதில் பழுக்கக் காய்ச்சிய
வேலையிட்டுக் குத்தியே வேதனை தந்திட்டாய்.
நம்பிக்கை துரோகம் செய்தவளே ! கேட்டிடுவாய்!
தமிழர் மரபுக்குத் தக்கதல்ல என்றாலும்
இருபெண்ணைக் காதல் செய்யாதது நான்செய்த
பெரும்குற்றம் என்றே இப்போது எண்ணுகிறேன்.

dellas
18-03-2013, 07:30 AM
ஒருவேளை உங்கள் காதலி இரண்டுபேரைக் காதலித்திருப்பாளோ.!!!!

அருமை..வாழ்த்துக்கள் .

ஜான்
19-03-2013, 03:15 AM
மாற்றுச் சிந்தனை நன்று!!

ஆனால் ஆல்டர்நேடிவ் என்கிற மாற்று ஏற்பாடு பற்றி ....சிந்தித்தால் சிரிப்பு வரும்!!சிலசமயம் மாற்று என்பது ஒரிஜினலை விட சிறப்பாக இருப்பதுவும் உண்மைதான் !!(ஆங்கிலத்துக்கு மன்னிக்க!!)

M.Jagadeesan
19-03-2013, 03:51 AM
டெல்லாஸ், ஜான் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

முரளி
19-03-2013, 11:59 AM
இதயம் இரண்டு இருந்திருந்தால் இந்த பிரச்னை இல்லை. :lachen001: