PDA

View Full Version : தூங்க வைக்க போகும் இரவு



nandagopal.d
17-03-2013, 05:40 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRiZAamQbZLfIWYRUMe6rosOIiQsta1kyE8GuIbHhyMlVkz0iuZFQ



நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின் விதிமுறையில்
நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம்
இரவில் மாறுதலுக்காக
வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு
தொடங்கினோம் வேலையை
அதை கேட்ட இரவு
சிரித்து கொண்டே சொன்னது
உங்களை ஒரேடியாக
துங்க வைக்க இது போதுமென்று

கும்பகோணத்துப்பிள்ளை
17-03-2013, 03:57 PM
இரவு உழைப்பில் கரைந்து போகும் மனிதனின் வாழ்நாட்கள் என்பதை உணர்த்தும் அருமையான விடையத்தை உள்ளடக்கிய கவிதை!
இது ஒர் இரவின் முடிவு!....படக்காட்சியும் அருமை!

ஆனால் எத்துனை தொழிலாலிகள் தங்கள்
வாழ்வின் விடியலுக்காக
.................... விழித்துக்கொண்டே
இரவுமுழுமையும்!

ராஜா
20-03-2013, 08:54 AM
உடல் கடிகாரத்தை இடர் படுத்தினால் என்னவாகும் என்று இரவுக்குத் தெரியும்..

அருமையான பொருள் பொதிந்த கவிதை நந்து.

மஞ்சுபாஷிணி
20-03-2013, 10:31 AM
உறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....

மனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...

அருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...

Sasi Dharan
20-03-2013, 11:23 AM
உறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை இவ்வுலகில்...!

இராஜிசங்கர்
22-03-2013, 11:29 AM
இயற்கையிலிருந்து மாறுபடும் எல்லாம் இடர்பாடுகளைத் தான் சந்திக்கும். ஆனால் என்ன செய்வது பூட்டை விற்று சாவி வாங்கும் வாழ்க்கை தானே பெரும்பாலான பேர்களுக்கு வாய்த்திருக்கிறது?

சுகந்தப்ரீதன்
31-03-2013, 07:42 PM
இயற்கை விதிமுறைக்கு...
எதிரான போட்டியின் விதிமுறையால்...
இம்முறையும் வெல்லபோவது விதியே...
அதை அழகாய் சொல்லி செல்லும் இக்கவியே.. வாழ்த்துக்கள்... நந்தகோபால்..!!:icon_b:

ஜானகி
01-04-2013, 04:10 AM
விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம் தான் !