PDA

View Full Version : கனவில் கவிபாடும்....!!!!!



manivannan samikkannu
14-03-2013, 11:58 AM
அவளை கண்டபிறகு .........
அவள் கரம் பற்ற
துடிக்கும் எனது கைகள் .....
அவள் மடி சாய்ந்து உறங்க
துடிக்கும் என் இமைகள் ....
அவள் இதழ் தீண்ட
துடிக்கும் என் இதழ்கள் ....
அவள் உயிருடன் உறவாட
துடிக்கும் என் உயிர் ....
அவளை மட்டுமே காண
துடிக்கும் என் கண்கள் .....
கவலைகள் பல இருந்தும் ....
அவளின் இன்ப நினைவுகளை .....சுமந்து செல்லும் என் இதயம் ......
கண்ணயர்ந்து உறங்கும் போது
கனவில் கவிபாடும் என் இதழ்கள் ....
கண் எதிரே அவளை காணும் போது .....
உயிரற்று உறைந்து விடுகீறது ....
அவள் ஓர் அசைவு பார்வையில் ......!!!!!!

கீதம்
14-03-2013, 12:04 PM
ஆஹா... கனவிலேயே காலம் கழிந்துவிடப்போகிறது. உறைநிலை விட்டு வெளிவாரும் காதலரே... :)

காதல் பொங்கும் கவிதை ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

இறுதிவரி அவளது பார்வையின் ஓர் அசைவில் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?:confused:

dellas
14-03-2013, 02:10 PM
அவளைக்கண்டு ..

பேருந்து நிலையத்தில் உறைந்தேன்..
தவறியது பேருந்து
அடுத்த பேருந்தில் கல்லூரிக்கு சென்றேன்..

கல்லூரியில் உறைந்தேன்...
வகுப்பறை நேரம் தவறியது..
அடுத்த வகுப்பில் கலந்தேன்

கடற்கரையில் உறைந்தேன்..
கடலலை உடை நனைத்தது...
ஈரம் உலர்த்தி வந்தேன்

கனவில் உறைந்தேன்..
காலை எழுவது முடங்கியது ..
உணவுதவிர்த்து சரிசெய்தேன்...

இப்படியே உறைந்தேன்..
ஒரு வருடத்திற்கு ..

அதிர்ச்சியில் உறைகிறேன்..இப்போது

அவள் புதிதாய் கரம்பிடித்த...
மணாளனோடு ...
எப்படி சரிசெய்வேன்

இப்படி ஏதாவது நடந்துவிடும்முன் ...சொல்லிவிடும் உம் உள்ளக்கிடக்கையை ...

பாராட்டுக்கள்..

manivannan samikkannu
21-03-2013, 06:18 AM
ungalathu parattukalukku nandri.......

இராஜிசங்கர்
22-03-2013, 11:23 AM
அதிர்ச்சியில் உறைகிறேன்..இப்போது

அவள் புதிதாய் கரம்பிடித்த...
மணாளனோடு ...
எப்படி சரிசெய்வேன்




அதிர்ச்சியில் உறைந்தேன்
அடுத்த சுடிதார் நின்றிருந்தது

இந்த முறை
தவறவில்லை பேருந்து
தவறியது வாழ்க்கை


பின்குறிப்பு: சும்மா வெளையாட்டுக்கு...

கும்பகோணத்துப்பிள்ளை
25-03-2013, 02:44 AM
நீ பார்த்ததால்
என்
இதயம் மட்டும்
இந்திரனாகிப்போனது!
கண்வீச்சுப் பொத்தல்கள்
அதில் ஆயிரம் கண்கள்!
உன்னைப்பார்பதறக்கென்றே!