PDA

View Full Version : கடன்



crvenkatesh
14-03-2013, 02:44 AM
உலகினில் நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு (2)
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு

(உலகினில் நீ எதை மறந்தாலுமே)

கருவினிலே நம்மை சுமந்தாளே
கண்ணுறக்கம் அவள் மறந்தாளே
அந்த தெய்வத்தின் த்யாகத்தை நினையாத
இந்தப் பிறவி எடுத்தது வீணாகும்(2)


(உலகினில் நீ எதை மறந்தாலுமே)

எல்லையிலாத அன்பு தந்தாள்
நல்லது தீயதின் அறிவு தந்தாள்
கல்லையும் கனியாக்கும் அவள் கருணை
சொல்லில் வடித்திட முடியாதது(2)

(உலகினில் நீ எதை மறந்தாலுமே)

தன்னை வருத்தி நமைக் காத்தாள்
நம்முகம் பார்த்து நகைப் பூத்தாள்
அன்னையின் அன்பில் திளைத்திடத்தானே
ஆயர்பாடியிலே அவனும் வந்தான்(2)

உலகினில்நீ எதை மறந்தாலுமே
உனைப் பெற்றவளை மறவாதிரு
அளவிடமுடியாதது அவள் கடனே
அந்தக் கடனை நீ மறவாதிரு

M.Jagadeesan
14-03-2013, 06:19 AM
அன்னையின் பெருமையை அளவிடமுடியாது.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!

என்பது உண்மையான வாக்கு.

கருவினில் சுமந்தவளும், கண்ணுறக்கம் மறந்தவளும்,
கல்லையும் கனியாக்கும் கருணை கொண்டவளும்
எல்லையில்லா அன்பை நம்மீது சொரிந்தவளும்
நம்மைப் பார்த்து நகைமுகம் பூத்தவளும்
அம்மா என்கின்ற நடமாடும் தெய்வந்தான்.

அருமையான கவிதை தந்த வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி!

crvenkatesh
14-03-2013, 12:19 PM
அன்னையின் பெருமையை அளவிடமுடியாது.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!

என்பது உண்மையான வாக்கு.

கருவினில் சுமந்தவளும், கண்ணுறக்கம் மறந்தவளும்,
கல்லையும் கனியாக்கும் கருணை கொண்டவளும்
எல்லையில்லா அன்பை நம்மீது சொரிந்தவளும்
நம்மைப் பார்த்து நகைமுகம் பூத்தவளும்
அம்மா என்கின்ற நடமாடும் தெய்வந்தான்.

அருமையான கவிதை தந்த வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி!

கவிதையை ரசித்து அழகான கருத்துத் தெரிவித்த உங்களுக்கு என் நன்றி.

dellas
14-03-2013, 01:21 PM
எத்தனை முறை சொன்னாலும் எத்தனை விதமாகச் சொன்னாலும் சலிக்காத வார்த்தை... அம்மா..

பாராட்டுக்கள்.

crvenkatesh
15-03-2013, 01:36 PM
எத்தனை முறை சொன்னாலும் எத்தனை விதமாகச் சொன்னாலும் சலிக்காத வார்த்தை... அம்மா..

பாராட்டுக்கள்.

உண்மையான சொற்கள் டல்லாஸ். மிக்க நன்றி.