PDA

View Full Version : மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்கீதம்
14-03-2013, 12:37 AM
மன்ற உறவுகளுக்கு வணக்கம். நம் தமிழ்மன்றத்தின் சிறப்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து ஏற்றத்தில் நிறுத்துகின்றன, கண்ணியமும் கட்டுப்பாடும் மிக்க இவ்வருந்தமிழ் மன்றத்தின் உறுப்பினர்களாய் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட, தமிழார்வம் நிறைந்த படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களின் ஓயாத பங்களிப்புகள்.

ஒவ்வொரு காலாண்டிலும் மன்றத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மனங்கவர் பதிவர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் முன்னிலை வகிப்பவர்களுக்கு அந்தக் காலாண்டின் மனங்கவர் பதிவர் பட்டமும் பதக்கமும் வழங்கப்பட்டுவருவதை அறிவீர்கள். நான்கு காலாண்டுகளில் முன்னிலை பெறும் பதிவர்களிடையே மற்றுமொரு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த ஆண்டின் நட்சத்திரப் பதிவராகப் பெருமைப்படுத்தப்படுவார்.

கடந்த வருடம் முதல் செயலாக்கம் பெற்றுள்ள இம்முறையில் இதுவரை நடத்தப்பட்ட மூன்று காலாண்டுத்தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குப் பெற்று நம் மனங்கவர் பதிவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்...

சிவா.ஜி அண்ணா அவர்கள் (ஏப்ரல்,மே,ஜூன் 2012)
கலைவேந்தன் அவர்கள் (ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2012)
ஜகதீசன் ஐயா அவர்கள் (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2012)

இம்மூவருக்கும் நம் வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்வதோடு, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2013 க்கான மனங்கவர் பதிவரைத் தேர்ந்தெடுக்க முன்வருவோம்.

மனங்கவர் பதிவர் தேர்தலுக்கான விதிமுறைகளை முன்பே அறிந்திருந்தாலும் நினைவுபடுத்தவேண்டியது என் கடமை அல்லவா?

1. கடந்த மாதங்களில் உங்கள் மனங்கவர்ந்த மன்ற உறுப்பினர் ஒருவரை முன்மொழியுங்கள். அவர் படைப்பாளியாகவோ, பின்னூட்டகராகவோ, விமர்சகராகவோ இருக்கலாம்.

2. ஒருவர் ஒருவரை மட்டுமே முன்மொழியலாம். (மனங்கவர்ந்த உறுப்பினரை முன்மொழியும் உரிமை மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உள்ளது.)

3. கடந்த காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர்த்து பிறரைப் பரிந்துரைக்கவும்.

4. பரிந்துரைக்கான இறுதித்தேதி 31 மார்ச் 2013.

ஜானகி
14-03-2013, 03:43 AM
ரமணி அவர்களை நான் பரிந்துரைக்கிறேன்.

முரளி
14-03-2013, 07:11 AM
எனது மனம் கவர்ந்த படைப்பாளி, விமர்சகர், பின்னூட்டகர், கவிஞர், அனைத்தும் ரமணி அவர்களே.

M.Jagadeesan
14-03-2013, 11:40 AM
தூயதமிழ்ச் சொல்லெடுத்துப் பாட்டிசைத்து மன்றத்து
நேயர்தம் நெஞ்சினிலே வீற்றிருப்பான்-தாயோன்
கணப்பொழுதும் நற்றமிழை விட்டகலா சான்றோன்
குணமதியே என்னுடைய தேர்வு.

கும்பகோணத்துப்பிள்ளை
14-03-2013, 02:48 PM
மகளிர் தினத்தை பெருமை படுத்தும் விதமாகவும்
தமது பதிவுகளால் நம் அனைவரையும் கவர்ந்த ஜானகியம்மாவை மனம்கவர் பதிவாளராகத் தேர்தெடுக்க பரிந்துரைக்கிறேன்.

prakash01
14-03-2013, 03:46 PM
எனது மனம் கவர்ந்த படைப்பாளி ரமணி ஐயா அவர்கள்.

ஜான்
16-03-2013, 02:44 AM
யாப்பு மற்றும் கதைகள் என தளராமல் பதிவுகளிடும் ரமணி ஐயாவை தேர்ந்தெடுக்கலாம்

மஞ்சுபாஷிணி
20-03-2013, 11:29 AM
என் மனம் கவர் பதிவர் ரமணி ஐயா....

ரமணி
20-03-2013, 01:40 PM
என் பெயரைப் பரிந்துரைக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி. இருந்தாலும் நான் மற்ற மன்றங்களில் அதிகமாகப் பங்கேற்காததால் அவ்வாறு செய்யுமோர் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதே சரியாகும் என்பது என் கருத்து.

அன்புடன்,
ரமணி

கலைவேந்தன்
27-03-2013, 08:30 AM
என்னுடைய தேர்வு நல்ல நல்ல விஷயங்களை சாதாரணமாகப் பதிந்து நம் மனம் கவர்ந்த ஜானகி அம்மா.

A Thainis
27-03-2013, 08:44 AM
பக்தி இலக்கியங்கள் வழியாக தினசரி தியானம் தந்து தெளிவான தெய்வீக சிந்தனை தரும் ஜானகி அம்மாள் அவர்களே என் மனம் கவர்ந்தவர்.

அமரன்
28-03-2013, 11:44 PM
எடுத்த பொறுப்பில் திறம்ப்டச் செயலாற்றும் கீதாக்காவுக்கு முதலில் என் பணிவுகள்.

கடந்த இரு மாதங்களாக மன்றத்தில் என்ன நடந்தது என்றே தெரியாதபடியால், எவரையும் பரிந்துரைக்க இயலாமைக்கு மன்னியுங்கள்.

M.Jagadeesan
29-03-2013, 03:17 AM
எடுத்த பொறுப்பில் திறம்ப்டச் செயலாற்றும் கீதாக்காவுக்கு முதலில் என் பணிவுகள்.

கடந்த இரு மாதங்களாக மன்றத்தில் என்ன நடந்தது என்றே தெரியாதபடியால், எவரையும் பரிந்துரைக்க இயலாமைக்கு மன்னியுங்கள்.


கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ?

jayanth
29-03-2013, 04:20 AM
கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ?


ஐயையோ...!!! மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...!!!


பி.கு:சும்மா விளையாட்டுக்கு...!!!

கீதம்
29-03-2013, 05:54 AM
கீதாக்காவா அல்லது கீதம் அக்காவா ?

இரண்டுமே சரிதான் ஐயா. 'கீதா' என்பது என் பெற்றோர் எனக்கிட்டப் பெயர். 'கீதம்' என்பது எனக்கு நானே இட்ட புனைபெயர். :)


ஐயையோ...!!! மறுபடியும் பூதம் கிளம்பிடிச்சே...!!!

ஜெயந்த் அண்ணா, பூதம் என்று என்னையா சொல்றீங்க? :confused:

கீதம்
04-04-2013, 04:35 AM
உங்கள் மனங்கவர்ந்த பதிவர்களைத் தேர்ந்தெடுக்க இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/31322-இந்தக்-காலாண்டின்-மனங்கவர்-பதிவரைத்-தேர்ந்தெடுக்க-வாக்களியுங்கள்!?p=573777#post573777) சென்று வாக்களியுங்கள் உறவுகளே...