PDA

View Full Version : செருப்புக் கடை

இராஜிசங்கர்
07-03-2013, 03:52 AM
கண்ணைக் கவரும் கண்ணாடிப் பெட்டிக்குள்
கவர்ச்சியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது - 500 ரூபாய் மதிப்புள்ளது;
ஆடித் தள்ளுபடியின் இடிபாடுகளுக்குள்
சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தது - 100 ரூபாய் மதிப்புள்ளது;
இரண்டுக்கும் தெரியுமா?
கடையைத் தாண்டினால் அவை
நடக்கவிருப்பது - ஒரே அழுக்குப் பாதையில் தான் என்று!

கும்பகோணத்துப்பிள்ளை
07-03-2013, 10:54 AM
நல்ல பொருளாதார வித்தியாசப்பார்வை.... பாராட்டுகள்!

அந்த அழுக்குப்பாதையின்
முன்னேயும் பின்னேயும்
ஊடேயும் சில செருப்பணியா கால்களும்! .....

M.Jagadeesan
07-03-2013, 11:09 AM
ஆலயத்திற்குள் செருப்புக்கு அனுமதியில்லை; ஆனால் செருப்பு விற்கும் கடைக்குள்ளே ஆண்டவனுக்கு அனுமதி உண்டு.

ராஜா
07-03-2013, 11:14 AM
மனிதர்களும் அவ்வாறே ராஜி..

ஆடி முடித்தபின் அனைவரும் ஓடி ஒளியும் இடம் ஆறடி மண்ணே.. எவரும் விலக்கல்ல.. அதற்கிடையேதான் எத்தனை பாகுபாடுகள்..

செருப்புக்கவி, மனித வாழ்வின் தத்துவம் சொல்லும் நெருப்புக்கவி..

பாராட்டுகள்..

இராஜிசங்கர்
07-03-2013, 03:51 PM
ஆலயத்திற்குள் செருப்புக்கு அனுமதியில்லை; ஆனால் செருப்பு விற்கும் கடைக்குள்ளே ஆண்டவனுக்கு அனுமதி உண்டு.

'நச்'சுங்க தல

இராஜிசங்கர்
07-03-2013, 03:52 PM
அந்த அழுக்குப்பாதையின்
முன்னேயும் பின்னேயும்
ஊடேயும் சில செருப்பணியா கால்களும்! .....

:icon_b:

இராஜிசங்கர்
07-03-2013, 03:55 PM
மனிதர்களும் அவ்வாறே ராஜி..

ஆடி முடித்தபின் அனைவரும் ஓடி ஒளியும் இடம் ஆறடி மண்ணே.. எவரும் விலக்கல்ல.. அதற்கிடையேதான் எத்தனை பாகுபாடுகள்..

அது தான் கவிதையின் சாராம்சம் சார். மனிதர்கள் இருக்கும் போது என்னவெல்லாம் பாகுபாடுகள், உயர்வு தாழ்வுகள். ஆனால் வாழ்வது அதே வாழ்க்கை தான், அதே மகிழ்ச்சி தான். தவறுவதும் ஓரே விதத்தில் தான் எனும் அர்த்தத்தில் எழுத முயன்றிருக்கிறேன்.

செருப்புக்கவி, மனித வாழ்வின் தத்துவம் சொல்லும் நெருப்புக்கவி..

பாராட்டுகள்..

தொடர்ந்த உற்சாகமூட்டலுக்கு நன்றிகள் சார்!

சுகந்தப்ரீதன்
08-03-2013, 03:43 PM
புத்தனுக்கு போதிமரம்...
இராஜிக்கு செருப்புக்கடை...

இறுமாப்பிலும் ஏக்கத்திலும் உழலும் உலகமாந்தர்களுக்கு உகந்த சித்தாந்தம் உரைக்கும் கவிதை..!! பாராட்டுக்கள்..!!:icon_b:

jayanth
09-03-2013, 02:47 AM
கண்ணைக் கவரும் கண்ணாடிப் பெட்டிக்குள்
கவர்ச்சியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது - 500 ரூபாய் மதிப்புள்ளது;
ஆடித் தள்ளுபடியின் இடிபாடுகளுக்குள்
சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தது - 100 ரூபாய் மதிப்புள்ளது;
இரண்டுக்கும் தெரியுமா?
கடையைத் தாண்டினால் அவை
நடக்கவிருப்பது - ஒரே அழுக்குப் பாதையில் தான் என்று!

:icon_b: (javascript:void(0)) :icon_b: (javascript:void(0)) :icon_b: (javascript:void(0))இதுதான் சமத்துவமா...???

இராஜிசங்கர்
09-03-2013, 10:00 AM
புத்தனுக்கு போதிமரம்...
இராஜிக்கு செருப்புக்கடை...

ஹி..ஹி

இராஜிசங்கர்
09-03-2013, 10:00 AM
:icon_b: (javascript:void(0)) :icon_b: (javascript:void(0)) :icon_b: (javascript:void(0))இதுதான் சமத்துவமா...???

அதான்..அவ்ளவே தான்.....................

கும்பகோணத்துப்பிள்ளை
10-03-2013, 07:37 PM
ஆலயத்திற்குள் செருப்புக்கு அனுமதியில்லை; ஆனால் செருப்பு விற்கும் கடைக்குள்ளே ஆண்டவனுக்கு அனுமதி உண்டு.
அவன் பட்ட மிதி அவனுக்கல்லவோ தெரியும்!
அதுதான் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டான்!
பிட்டுக்கு மண் சுமந்தவனை
பிரம்பால் அடித்தானனொருவன்... அடிதாங்காமல்
காட்டுக்குள் ஒளிந்தவனை
கால்செருப்பால் மிதித்தே
காறித்துப்பி கண்பிடுங்கி அப்பினானொருவன்
அவன் என்ன செய்வான்!
அவன் பட்ட மிதி அவனுக்கல்லவோ தெரியும்!
அதுதான் அங்கே வந்து உட்கார்ந்து கொண்டான்!

(சம்பந்தமில்லைதான்...செருப்புகடை ...ஆண்டவன் என்றதும் தோன்றியது!.....)