PDA

View Full Version : ஓவியத்தின் உயிர்......



Nanban
13-01-2004, 06:51 AM
ஓவியத்தின் உயிர்......

காட்சிகள் -
விரியும் விழிகளின் அளவு.
திறந்த கதவுகளின் அளவு.

விரியத் திறந்த கதவு
விரியத் திறந்த விழி
காட்சிகள் ஓடவில்லை.
சட்டமிடப்பட்ட ஓரே சித்திரம்.

அசைவில்லாத
அணக்கமில்லாத
அழகிய ஓவியம்...

இந்த ஓவியம்
உயிர் பெற்றுத் தான்
இருந்தது -
ஏதோ ஒரு நாளில்....

யாரோ
ஏதோ சிரமத்தினால்
பிடித்து இழுத்து
நிறுத்துவதற்கு
சற்று முன்வரை
இந்த ஓவியம்
ஓடிக்கொண்டுதான் இருந்தது......

ஒரு புகைவண்டியின்
ஜன்னல் வழிக் காட்சிகள் போல்........

Mano.G.
13-01-2004, 09:23 AM
ஓவியத்திற்கு இப்படி
ஒரு விளக்கமா?

அருமை
நண்பனே


மனோ.ஜி

Nanban
14-01-2004, 09:07 AM
இது ஓவிய விளக்கமல்ல, மனோஜி.......

மனிதனின் இறப்பைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனம்.....

வாழும் பொழுது, திரைப்படம் போல வண்ணங்கள் நிரம்பிய ஓவியங்கள் ஓடிக்கொண்டிருந்ததைப் போன்ற ஒரு வாழ்க்கை........

இறந்ததும், சுவரில் சித்திரமாக ஓவியம் நின்று போய்விட்டது.........

வாழ்வதெப்படி -

கதவுகளை திறந்து வையுங்கள்..... விழிகளை விரித்துப் பாருங்கள்

வாழ்க்கைப் புரியும்..........

kavitha
19-01-2004, 09:22 AM
வாவ்!
வாழ்ந்த மனிதனை
சட்டத்திற்குள் பார்க்கும்போது
தோன்றிய கவிதையா?

கவிதையின் கருப்பொருளை
எங்கேனும் கோடிட்டு இருக்கலாமே!

சிலரது வாழ்க்கை இப்படித்தான்..
என்ன செய்தோம் என்று
எண்ணுவதற்குள்ளே முடிந்துவிடுகிறது.

இக்பால்
19-01-2004, 10:43 AM
நண்பனுக்கு கவிதைக்காகவும்,

தங்கை கவிதாவின் விமர்சனத்துக்காகவும் பாராட்டுக்கள்.

aren
19-01-2004, 10:52 AM
]

ஓவியத்தின் உயிர்


சட்டமிடப்பட்ட ஓரே சித்திரம்.

......

சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தாலும்
அது ஒரு சரித்திரம்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்கிறார்கள்
சிறு சிறு துளிகளாக.
அந்த சிறு சிறு துளிகள்
பெரிய கடலாகிறது
அதுவே சரித்திரமாகிறது

உங்கள் கவிதை வரிகளுக்கு என் பாராட்டுக்கள்.

இளசு
19-01-2004, 11:28 PM
கவிதையின் கருப்பொருளை
எங்கேனும் கோடிட்டு இருக்கலாமே!

.

நண்பன்..
என் கருத்தும் இதே...

இக்பால்
20-01-2004, 05:30 AM
நண்பன் சிறப்பம்சத்தையே மாற்றச் சொல்லுகிறீர்களே? இது நியாயமா?:)

Nanban
06-04-2004, 06:31 PM
மனோஜி., கவிதா, இக்பால், ஆரென், இளசு - அனைவருக்கும் நன்றிகள்.....


இந்த ஓவியம்
உயிர் பெற்றுத் தான்
இருந்தது -
ஏதோ ஒரு நாளில்....

என்று எழுதிய பொழுது, இறப்பை உணர்த்திவிட்டதாக நினைத்தேன்.....