PDA

View Full Version : உனக்கென்ன சென்றுவிட்டாய்- உயிர் தன்னைக் கொன்று விட்டாய்!



arun karthik
03-03-2013, 03:25 PM
உனக்கென்ன சென்றுவிட்டாய் - என்
உயிர் தன்னைக் கொன்று விட்டாய்!
உன் பிரிவினாலே வாடுகின்றேன் - அந்த
வலியில் உன்னைச் சாடுகின்றேன்!

எங்கிருந்து வந்தாய் நீயே, என் இதய கூட்டிற்குள்ளே?
காதல் அன்பை சொன்னேன் நானும், கண்கள் பார்த்து தானே - நீயும்
அன்பு செய்தாய் என்னை விரும்பி ஏற்ற மானே - ஒரு கூண்டில்
வாழ்ந்த பறவைகள் நாமும், உலகம் மறந்தோமே !

வேலை தேடி அலைந்தேன் நாமும் வாழ்ந்திடவன்றோ? - எந்தன்
வேளை அந்த வேலை அதுவும் கானலின் நீரோ? - உனக்கோ
அகவை கூடிப்போக, பெற்றோர் மணம் முடித்தனரோ? - நீயும்
மனமும் இன்றி மார்க்கம் இன்றி, மணம் செய்தாயோ?


என் கடிகாரத்தின் முட்கள் நகர மறுப்பதேனோ?- வீட்டுக்
குளியலறையின் தரையோ, கண்ணீரின் கனத்தை சுமப்பதேனோ?
கைகள் சூடு கண்ட பின்னும் உன்னை, தீண்ட துடிப்பதேனோ? - என்றும்
ஆசை கொண்ட நெஞ்சம் உன்னை விரும்பி வெறுப்பதேனோ?

என்ன செய்ய நானும், அற்ப மானிடன் தானே..
கண்கள் குளங்கள் ஆகிடும்போது, உன் கைகள் இல்லையே ..
நீ தேடிச் சென்ற வாழ்வும் உன்னை வாழ வைக்குமே ..
நாகரீக தேவதாஸ் நானும் வாழ்த்திடுவேனே!

சுகந்தப்ரீதன்
03-03-2013, 04:13 PM
எதார்த்தத்திற்க்கும் எண்ணத்துக்குமான பரமபத ஆட்டத்தில் வெட்டுபடும் வேதனையை அழகாய் பிரதிபலிக்கிறது கவிதை..!!

நாசுக்காய் சொன்ன நாகரீக தேவதாஸ் நகைப்பூட்டுகிறது... வாழ்த்துக்கள் அருண்கார்த்திக்.. தொடருங்கள்..!!

ஜான்
05-03-2013, 01:20 AM
ஆம் !!மாடர்ன் தேவதாஸ் என்ற பிரயோகம் நன்றாய் இருந்தது