PDA

View Full Version : ஒரு கண்டுபிடிப்பு



சொ.ஞானசம்பந்தன்
28-02-2013, 11:42 AM
அக்*ஷாத் ரத்தி என்பவர் இன்றைய " இந்து " ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஒரு கட்டுரையின் முக்கிய தகவல்களை மொழிபெயர்த்துத் தருகிறென் :
கடலுள் மூழ்கிய கண்டம் கண்டுபிடிப்பு
நார்வே ஜெர்மனி தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகள் ( U. K ) ஆகியவற்றின் அறிவியலாளர் குழுவினர், இந்தியப் பெருங் கடலில் மூழ்கிப்போன கண்டமொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்
மொரீசியா என அவர்கள் பெயர் சூட்டி இருக்கிற அந்தக் கண்டம், அவர்கள் கணக்குப்படி , மொரீசியசு தீவின் அடியில் கிடக்கிறது , வடக்கில் செஷேல் தீவுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு நீண்டுள்ளது .
அய்க்கிய நாடுகளின் லிவர்ப்பூல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் மேற்சொன்ன குழுவினருள் ஒருவருமான நிக் குஸ்நிர் ( Nick Kusznir ) , "மொரீசியசின் அடியில் ஒரு சிறு கண்டம் இருந்தது என நாங்கள் மிக உறுதியாக அறிய முடிகிறது" என்றார் .
நீரில் மூழ்கிய கண்டங்கள் பற்றித் தவறான நம்பிக்கைகள் ( myth ) பல உண்டு .
எடுத்துக் காட்டாக , இந்தியப் பெருங் கடலில் தென் துருவக் கண்டத்திலிருந்து கன்னியாகுமரிவரை ஒரு பெரிய நிலப் பரப்பு அகன்றிருந்தது என்று 19 ஆம் நூற்றாண்டில் நம்பப்பட்டது ; ஆனால் அது ஆராய்ச்சியின் முன் நிலைக்கவில்லை .
+++++++++++++++++++++++++++++++