PDA

View Full Version : கோட்சே பேசுகிறேன் -2maniajith007
25-02-2013, 03:30 PM
நானா:நான் இதற்க்கு உடன்படுகிறேன்

நாதுராம் :அவரை தடுத்து நிறுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது அது அவரது படுகொலை மட்டுமே,

நானா:ஆனால் இது ஒரு அவசர முடிவாக உங்களுக்கு தோன்றவில்லையா..

நாதுராம் :இல்லை நானா நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் துப்பாக்கியை எடுத்து இயக்கி படுகொலை புரிவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல , படுகொலை என்பது விபத்து அல்ல, ஆம் கொலை வேண்டுமெனில் விபத்தாக நிகழலாம் படுகொலை அவ்வாறு அல்ல, அதுவும் இந்த காந்தி விஷயத்தில் அதை செய்ய முடியாது

நானா:இது தவிர்க்க முடியாது என நம்புகிறீர்களா

நாதுராம் :நிச்சயமாக இது தவிக்க முடியாதது மட்டுமல்ல காலம் தாழ்ந்த ஒரு நடவடிக்கையும் கூட ,

நானா:உங்களால் உணர முடிகிறாதா நாம் வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களை நாம் சேதப்படுத்துகிறோம் என்பதை,

நாதுராம்:உலக சரித்திரம் குறித்து எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளது , வரலாற்றில் இது ஒரு பக்கம் மட்டுமே சகாப்த்தம் இல்லை,ஒருவேளை இந்த பக்கங்களை இன்று நாம் புரட்டாவிட்டால் நம் தேசத்தின் மற்றைய பக்கங்கள் எழுப்படாமல் என்றென்றும் வெற்று காகிதமாய் இருந்து விடும் .

நானா:கேளுங்கள் பண்டிட்,

நாதுராம்: காலம் சாசுவதமானது, அழிக்க முடியாதது, நீங்கள் அதன் பக்கங்களை புரட்டலாமே தவிர அதை கிழித்து அப்புறத்தி விட இயலாது, காந்தி வரலாற்றில் முக்கியமான ஒரு இடத்தை பெற்றவர் என்பதை எவரும் ஏன் நான் கூட மறுக்கவியலாது, அந்த பக்கங்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும், எதிர்காலத்தில் எப்போதேனும் ஒரு இக்கட்டான புயலை போன்ற போன்ற தருணத்தில் இந்த பக்கங்கள் காற்றில் அலைகழிக்கப்படும் இதே காந்தியின் வரலாற்று பக்கங்களும் கூட உலகத்தின் முன் அலைகழிக்கப்படும்,நான் காந்தியின் அஹிம்சா கொள்கையை மறுக்கவில்லை அதே சமயம் அவர் ஒரு துறவியே தவிர அரசியல்வாதி இல்லை ,அவரது அஹிம்சை கொள்கையில் சுய பாதுகாப்பு மற்றும் சுய அக்கறை போன்றவற்றிக்கு இடமில்லை, அஹிம்சை கொள்கையை பொறுத்த வரையில் தனது சுய பாதுகாப்பிற்காக வாழ்விற்காக போராடுவதை அது வன்முறை என வரையறுக்கிறது, உண்மையில் இப்படி வரையறுப்பது அஹிம்சை கொள்கை அல்ல சுய அழிப்பு,

நானா: நான் தங்களுடைய கருத்துக்கு உடன்படுகிறேன் எனினும் இது ஆபத்தான அபாயமிக்க ஒரு முடிவினை எடுத்துள்ளீர்கள் என உங்களுக்கு தோன்றவில்லையா ,

நாதுராம்: எவரேனும் இதை செய்வார்கள், ஆனால் அதற்காக நீங்கள் காத்திருக்க கூடாது, அதே சமயம் இது சரியானதும் அல்ல,

நானா : நாம் கடுமையான முறையில் மறியல் போன்ற போராட்டங்களை நடத்தினால்,

நாதுராம்: நாம் முன்பே அதனை செய்து வந்துள்ளோம் ஆனால் அதனால் நடந்தது என்ன? தேசத்தை பிரிப்பது என்பது தேவையற்ற முடிவு, ஒட்டுமொத்த தேசமக்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் மக்கள் தொகை எத்தனை சதவீதம்? இதற்க்கு தேசத்தை பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை, அது வெறும் கோரிக்கையாக இருந்திருந்தால் மவுலானா ஆசாத் இந்தியாவில் தங்கியிருக்க முடியாது, ஜின்னாவின் வற்புறுத்தலால் காந்தியின் முடிவால், ஒட்டுமொத்த மக்கள் மற்றும் அமைச்சரவையின் எதிர்ப்பும் இருந்த போதிலும் இந்த தேசம் பிரிக்கப்பட்டது, ஒரு தனிமனிதன் எந்த வகையிலும் தேசத்தை விட உயர்ந்தவனில்லை நானா, ஆனால் காந்தி தன்னை தேசத்தை விட உயர்ந்தவராக எண்ணி கொண்டுள்ளார்,

நானா: ஜின்னா பிரதம மந்திரியாக வர விரும்பினார் ............

நாதுராம் : ஒரு இஸ்லாமியர் பிரமதராக வருவதற்கு நாம் ஒன்றும் எதிர்க்கவில்லையே, ஜனநாயகத்தில் கத்திமுனையில் உங்கள் கோரிக்கைகளை முன் வைக்க கூடாது, ஜின்னா அதை செய்தார் காந்தி அதே கத்தியால் தேசத்தை குத்தினார், இந்த நிலத்தை கூறுபோட்டு பாகிஸ்தானுக்கு கொடுத்தார், நாம் அப்பொழுது போராட்டங்கள் மறியல் செய்தோம் ஆனால் அவை வீண்தானே , நமது தேசத்தின் தந்தை தனது தந்தைக்குரிய கடமைகளை பாகிஸ்தானுக்கு செய்துவிட்டார்,

நானா:அதற்கும் நமது அமைச்சரவை சம்மதித்ததே.......

நாதுராம்: இன்றும் கூட அமைச்சரவை 55கோடி ருபாய் பாகிஸ்தானுக்கு தரவேண்டிய கோரிக்கைக்கு ஒப்புதலளித்து உள்ளது .......

நானா: அவர்களுக்கும் இதில் சமபங்கு பொறுப்பு உள்ளதே...

நாதுராம் :நிச்சயம் அவர்களும் பொறுப்பாளிகள்தான், ஆனால் காந்தி தனது சாகும்வரை உண்ணாவிரதத்தின் மூலம் அவர்களை அச்சுறுத்தினார் ,பொருளாதார ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் அவரது உடல் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத மிரட்டலின் காரணமாக
அழிவினை ஏற்படுத்தி உள்ளார், இன்று முஸ்லிம்கள் தேசத்தின் ஒரு பகுதியை எடுத்து கொண்டார்கள், நாளை ஒருவேளை சீக்கியர்கள் பஞ்சாபை கேட்க்க கூடும், மதங்கள் மீண்டும் சாதிகளாக மாறும், அவர்கள் பிரிவுகளுக்குள்ளேயே உள்ள துணை பிரிவுகளுக்கு கோரிக்கை வைப்பார்கள், பிறகு ஒரே தேசம் என்ற கோட்பாட்டில் என்ன மிஞ்சும், தேசிய ஒருமைப்பாடா?
எதற்க்காக நாம் சுதந்திரம் பெற பிரிட்டிஷ் ஆட்ச்சிக்கு எதிராக தனித்தனியாகவின்றி ஒன்றாய் போராடினோம், , பகத் சிங் ஒன்றும் பஞ்சாபுக்கு மட்டும் சுதந்திரம் போராடினாரா அல்லது , சுபாஷ் சந்திர போஸ் வங்காளத்திற்கு மட்டும் சுதந்திரம் கேட்டு போராடினாரா?

ராஜா
03-03-2013, 10:44 AM
நாளை ஒருவேளை சீக்கியர்கள் பஞ்சாபை கேட்க்க கூடும், மதங்கள் மீண்டும் சாதிகளாக மாறும், அவர்கள் பிரிவுகளுக்குள்ளேயே உள்ள துணை பிரிவுகளுக்கு கோரிக்கை வைப்பார்கள், பிறகு ஒரே தேசம் என்ற கோட்பாட்டில் என்ன மிஞ்சும், தேசிய ஒருமைப்பாடா?
எதற்க்காக நாம் சுதந்திரம் பெற பிரிட்டிஷ் ஆட்ச்சிக்கு எதிராக தனித்தனியாகவின்றி ஒன்றாய் போராடினோம்

காந்தியார் கொன்றொழிப்பு நிகழ்வு, மூர்க்கத்தனமான முடிவின் பின்னே அமைந்ததல்ல என்று விளக்கும் வரிகள்..

பாராட்டுகள் மணி அஜித்..!

maniajith007
05-03-2013, 03:59 PM
நன்றி , நன்றி ராஜா அண்ணா