PDA

View Full Version : கோட்சே பேசுகிறேன் -1



maniajith007
25-02-2013, 02:27 PM
மத்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் வழங்க முடியாது என முடிவெடுத்தது எடுத்தது, ஜனவரி 13 பாகிஸ்தானுக்கு 55 கோடி வழங்க கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் காந்திஜி, அன்றே மத்திய அரசு தனது முடிவை மாறியது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தரப்படும் எனவும் அறிவித்தது, "ஜனவரி 13 அன்றுதான் காந்தியை கொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்".



ஜனவரி 13,1948

(அக்ரானி பத்திரிகையின் ஆசிரியர் அறை நானா ஆப்தே உள்ளே நுழைகிறார் )
அக்ரானி என்பதற்கு பொருள் முன்னோடி அல்லது முன் கூட்டியே விஷயங்களை தருவது நன்றி: கூகிளார்)

நானா:பண்டிட் எங்கே இருக்கிறார் ? விசு

விசு:(வருகிறார்):அய்யா

நானா: நீங்கள் முதற்பக்கத்தை அச்சுகோர்த்து ஒன்றிணைத்து விட்டீர்களா? அப்படியெனில் அதை நிறுத்துங்கள் என்னிடம் சமிபத்திய முக்கிய செய்தி ஒன்று உள்ளது

விசு: நீங்கள் முதற்பக்கத்தை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா,அப்படியென்றும் நாளை ஒன்றும் முக்கிய விஷயம் இல்லையே ,

நானா:புரிந்துகொள்ளுங்கள்,நாம் முதற்பக்கத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டும் இது மிக முக்கிய செய்தி இப்பொழுதுதான் வானொலியில் ஒலிபரப்பானது

விசு: ஆனால், பண்டிட் அய்யா இப்பொழுதான் தலையங்கத்தை திருத்தம் செய்து தந்தார் ,நான் அதை அச்சு கோர்த்து அச்சிட தந்தேன் மறுபடியும் நாம் எப்படி?

நானா:பண்டிட் எங்கே ?

விசு:அவர் எழுதும் அறையில் அமர்ந்துள்ளார் , மேலும் வடிவமைத்த பக்கங்களை பதிப்பிக்க கொடுத்துள்ளார்,

நானா:அவரை கூப்பிடு,

நாதுராம் :யாரை அழைக்க வேண்டும்?

நானா:உங்களைத்தான் அழைக்க விரும்பினேன், நாம் முதற்பகத்தை மீண்டும் தயார் செய்ய வேண்டும்,

நாதுராம்:தேவையில்லை என் புதிய தலையங்கம் நீங்கள் குறிப்பிடும் விஷயத்தை பற்றியதே , விசு எங்களுக்கு கொஞ்சம் காபி தாருங்கள்(விசு செல்கிறார் )

நானா:நான் எந்த செய்தியை பற்றி பேசுகிறேன் என்பதை தாங்கள் அறிவீர்களா?

நாதுராம்: ஆம் நிச்சயமாக, அமைச்சரவை தங்கள் முடிவை மாற்றி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55கோடிரூபாயை தர ஒப்புக்கொண்டதும் காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதும்,

நானா:நீங்கள் தலையங்கத்தை மாற்றி விட்டீர்களா?

நாதுராம்:ஆமாம் மேலும் நான் எண்ணுகிறேன் எனது முந்தைய தலையங்கம் முழுக்க பொய்யை தவிர தவிர வேறொன்று மில்லை என,

நானா:என்ன பொய்யா ? நீங்கள் எழுதுவதா ?நிச்சயம் இருக்காது,

நாதுராம்:ஆம் நாளை ஜனவரி 14 மகர சங்கராந்தி நான் தலையங்கத்தில் நாளை மகரசங்கராந்தி கொண்டாட வேண்டாம்,இனிப்புகளை பரிமாற வேண்டாம் , இனிமையான முறையில் நடந்து கொள்ள வேண்டாம்,துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் விநியோகம் செய்யுங்கள், இனிய வார்த்தைகள் தேவையில்லை போரை குறித்தே பேசுங்கள், எதிரிகளை வீழ்த்துங்கள் என்று ,

நானா:இது உண்மையா ?என்ன எழுதி உள்ளீர்கள் நீங்கள்,

நாதுராம்: ஆம் ,என் புதிய தலையங்கத்தின் தலைப்பு பற்றி கேட்கவில்லையே நீங்கள் ?

நானா:என்ன அது ?

நாதுராம்:செயலாற்ற பேச்சு பயனற்றது,

நானா: இதன் பொருள்

நாதுராம்:இதுவே சரியான தருணம் ,நமது எதிர்ப்பை காட்ட சட்டரீதியான ஊர்வலம், போராட்டம், மறியல் , போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதயமற்ற நீதிக்கு எதிராக வேறு வகையான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் ,
இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசை தலையங்கம் மூலம் எச்சரிக்க முடியாது நானா,
நீங்கள் என்ன நினைப்பீர்கள், மக்கள் இதை பொறுக்க மாட்டார்கள் கிளர்ச்சி செய்வார்கள் அப்படித்தானே, இந்த மக்கள் யார் நானா,
நீங்கள் குறிப்பிடுவது நமது வாசகர்களையா அல்லது நமது கூட்டங்களுக்கு வந்து நமது உரையை கேட்ப்பவர்கலையா?
இல்லை , நானா அவர்கள் மட்டுமல்ல நீங்களும் நானும் கூட மக்கள் தான்,
நானா நாம் நமது தலையங்கங்களில் என்ன எழுதினோம் ,என்ன பேசினோம் என்பதையும் நாம் மறந்தொமெனில் நாம் கூட்டங்களில் பேசிய வீரஉரைகள் பயனற்றவை,

நானா: இவையனைத்தையும் எழுதி உள்ளீர்களா?

நாதுராம்:ஆமாம் மேலும் நாளை போர்ப்ரகடனம் செய்யப்பட்ட தசரா பண்டிகையை கொண்டாடும் படியும் எழுதி உள்ளேன்,

நானா:நாம் கைது செய்யப்படுவோம் பண்டிட்



எந்த விலை கொடுத்தேனும் காந்தியை தடுத்து நிறுத்த வேண்டும்


நாதுராம்:நான் அப்படி நினைக்கவில்லை, அக்ரானி இந்து சமயத்தின் குரலாக விளங்குகிறது, அரசாங்கம் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் தராதபோது, நாம் வாய் திறக்கவில்லைஎனில் இந்து மதத்தின் குரலாக உள்ளோம் என்ற பேச்சுக்கோ இடமில்லாமல் போய் விடும், நமது பொறுமை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,
நமது மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் புறக்கணிக்க பட்டுள்ளது,நாம் கைகளை கட்டிக்கொண்டு நிகழும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்வோம் என அவர்கள் எண்ணுகின்றனர்,
நமது கோபம் வீரியத்தை இழந்து விட்டது,நாம் மன்னிக்கும் குணத்தை மட்டுமே அறிந்துள்ளோம் , அவர்கள் நம்மை சித்ரவதை செய்து படுகொலை புரிவார்கள் ஆனாலும் அதனை நாம் பொறுமையாக ஏற்று கொள்ள வேண்டும் , இது நமது இயற்க்கை குணமாகவே ஆகிவிட்டது ,இந்து மதத்தின் குரலானா நம்மை அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கவில்லை ,ஆம் இந்த அரசு தீவிரமாக நம்மை பற்றி எண்ணி பார்க்கும் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விவாதிக்கப்படும்போது .

நானா :எந்த வழக்கு

நாதுராம்:IPC302 காந்தி கொலை வழக்கு

நானா:என்ன சொல்கிறீர்கள் பண்டிட்

நாதுராம் :நிச்சயமாக நானா நான் தலையங்கம் எழுதும்பொழுது தொடர்ச்சியாக என்னுள் கூறிக்கொண்டேன் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல ,எடுக்க போகும் நடவடிக்கையின் முன்னுரை

நானா :எனக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்று உண்டு நாதுராம் தவறு செய்ய மாட்டார் ,அவர் சரியானவற்றையே செய்வார் என்று ஆனாலும் சிலவற்றை கேட்க்க வேண்டும் ஏனெனில் கண்மூடித்தணமாக பின்பற்றுபவன் நல்ல நண்பனாக இருக்க முடியாது ,

நாதுராம் :என்ன விலைகொடுத்தெனும் காந்தியை தடுத்து நிறுத்த வேண்டும் .

ராஜா
03-03-2013, 09:38 AM
நல்ல துவக்கம்..!

sarcharan
05-03-2013, 09:41 AM
மீ நாதுராம் கோட்சே போல்தே - அருமையான சுயசரிதை

காந்தியை கொன்ற பின்பு கோட்சே நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் உரையாற்றியுள்ளார்.
காந்தி செய்த முட்டாள்தனத்தினால் இன்று நாம் அவதிப்படுகின்றோம்

அன்று வல்லபாய் படேலை தேர்வு செய்யாதது ஒரு பெருந்தவறு. காந்தியும் நேருவும் சேர்ந்து இந்தியாவை கேவலமான நிலைக்கு கொணர்ந்து விட்டார்கள்

maniajith007
05-03-2013, 02:51 PM
என் அரை குறை ஆங்கில அறிவில் அதை தான் நண்பரே மொழி பெயர்த்தேன்