PDA

View Full Version : கோட்சே பேசுகிறேன்maniajith007
25-02-2013, 03:25 PM
காந்தியை பற்றி என் பள்ளி பருவத்தில் படிக்கும்பொழுது அவரின் கொலை பற்றி அத்தனை விரிவாய் என்னிடம் எந்த ஆசிரியரும் சொன்னதில்லை, காந்தி துப்பாக்கியால் சுட்டு கொள்ளபட்டார் எனவும் கொன்றவனின் பெயர் கோட்சே என்றும் மட்டுமே எனது வரலாறு மீண்டும் மீண்டும் கூறியது தவிர மற்ற விஷயங்கள் தெரியவில்லை,அதன் பின் இணையத்தில் எதேச்சையாக எதோ ஒன்றை தேடும் பொழுது காந்தி கொலை வரலாறு மற்றும் நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்கு மூலம், இந்த நாடகம் இவைகளை வாசிக்க நேர்ந்தந்து அதே சமயம் இந்த நாடகம் மாஹராஷ்ட்டிராவில் தடை விதிக்கப்பட்டது எனவும் அறிந்த பொழுது இந்த நாடகத்தில் அப்படி என்ன இருக்கிறது தடை விதிக்க என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது, சரி எனக்கு தெரிந்த அரை குறை ஆங்கில அறிவில் மொழி பெயர்க்க வேண்டும் என நினைத்தேன் செய்கிறேன் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடுகிறேன்.


(மேடையில் இருக்கும் ஒருவர் மீது மட்டும் விளக்கு ஒளி பாய்ச்சப்படுகிறது , பார்வையாளர்களுக்கு எதிர்புறமாக நிற்கும் நாதுராம் கோட்சே, சட்டென திரும்பி பார்வையாளர்கள் பக்கம் திரும்பி யாரையோ தேடுவது போல கூர்ந்து கவனித்து பின் கழுத்தை குலுக்கி உடல் அசைவின் மூலம் மறுப்பை வெளிப்படுத்தி பேச துவங்குகிறார்)

நாதுராம் :


உங்கள் முகங்கள் எனக்கு பரிட்ச்சையமில்லை, உண்மையில் சொல்ல போனால் இந்த பரிட்சையமில்லை என கூறுவது ஒரு விதத்தில் தவறாகும் ஏனென்றால் உங்கள் முகங்கள் எனக்கு புதியவையாக உள்ளது ஆமாம் உண்மையில் மிக புதியவை எனக்கு , ஆனால் நினைவில் கொள்ளுங்கள் உங்களுக்கு அவை தெரிந்து இருக்காது, உங்களில் பலர் அப்பொழுது பிறந்திருக்க கூட மாட்டீர்கள்.ஆனால் நிச்சயமாக அரசின் வரலாற்று பக்கங்களில் என்னை ஹிந்து மத வெறியனாக வாசிக்க நேர்ந்து இருக்கும்.

உங்களில் நடுத்தர வயதினர் அந்த கொலையின் விளைவாக பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தங்களை காக்க ஓடி கொண்டிருந்த பெற்றோர்களை பற்றி கொண்டு கேட்டு கொண்டிருந்திருக்கலாம் யார் இந்த நாதுராம் கோட்சே? நமது வீடுகளை ஏன் இவர்கள் அவன் பொருட்டு கொளுத்துகிறார்கள்?

ஆனால் பெரியவர்கள் என்னை பற்றி அறிந்து இருப்பீர்கள், நிச்சயமாக வானொலியின் மூலம் என்னை பற்றி நீங்கள் அறிந்து இருக்காலாம், மேலும் உங்களில் பலர் என்னாலும் ஆப்த்தேவாலும் நடத்தப்பட்ட அக்ரானி நாளிதழை வாசித்து இருக்கலாம்,மேலும் என் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச்சை கேட்டிருக்கலாம் என்னுடன் பழகியும் சந்தித்தும் இருக்கலாம், ஆனால் அவற்றை நீங்கள் ஜனவரி 30 சம்பவத்திற்கு பின் மறுக்கும்படி ஆகி இருக்கும் ,

என் வயது என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? எண்பத்து எட்டு ஏறத்தாழ தற்பொழுது தொண்ணுறு வயது, நான் இளமையுடன் தெரிவதால் ஒருவேளை நான் பொய் கூறுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்த இளமைக்கு பின்னால் இருக்கும் மர்மம் தெரியுமா , வயதாவர்தர்க்கு முன்பே ஏற்பட்ட அகால மரணம், அதையும் நான் மனப்பூர்வமாக ஏற்று கொண்டேன்.

நான் இந்த நூற்றாண்டின் மத்தியில் 19 மே 1910 ஆம் ஆண்டு பிறந்தேன், என் தந்தை விநாயக்ராவ் தபால் துறை ஊழியர், என் தாயின் பெயர் லக்ஷ்மி, தந்தை விநாயக் ராவின் மாத சம்பளம் 15 ருபாய், அந்த சம்பளத்தில் 10 ரூபாயை தன்னுடைய குடும்பத்தினருக்கும் மீதமுள்ள 5 ரூபாயை அவருடைய தாய் தந்தைக்கும் அனுப்புவார், விநாயக் ராவ் தம்பதியர்க்கு 4 குழந்தைகள் பிறந்தன எவரும் உயிர் பிழைக்க வில்லை, அவர்களின் பிரார்த்தனையின் பலனாக நான்காவது மகன் பிறந்தான், நாதுராம் கோட்சே அவன் உயிர் பிழைத்தான் காரணம் விநாயக் ராவ் தம்பதியினர் அவர்கள் மகனின் இள வயது மரணத்தால் துன்பப்பட வேண்டும் என்றும் , காந்தி அவனாலே உயிர்துறக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டு இருந்தது .

என் வாழ்வின் மீத நாட்கள் சுமூகமாகவே கழிந்தது,

என் சிறு பிராயத்தில் திருடியதே இல்லை ஆகவே என் தந்தையிடம் நான் மன்னிப்பை கூறியதே இல்லை, நான் பிரம்மச்சர்யம் மேற்கொள்வதாக சபதம் மேற்கொள்ளவில்லை காரணம் நான் ஏற்க்கனவே அதை என் வாழ்வில் கடை பிடித்தேன், நான் அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு உணவும் உடையும் தந்தவாறு அங்கே சுழன்று கொண்டிருந்தேன், அவர்கள் நிர்வாணமாக உள்ளார்கள் என்பதற்காக அரை நிர்வாணமாக எங்கும் செல்ல வில்லை, நான் நூல் நிற்க்கும் ராட்டை சுற்றியதில்லை, என் கழிப்பறையை நானே சுத்தம் செய்ததில்லை, மௌனத்தை உணர்ந்ததே இல்லை தூக்கிலிடப்படும் வரை,

காந்தியின் வாழ்விற்கும் எனக்கும் ஒரு பொதுவான ஒரு காரணம் உண்டு,
இருவரும் அவரரவர் மரணத்திற்கு பரஸ்பர காரணம், அவர் தனது கொள்கைக்காக உயிர் வாழ்ந்தார், நான் என் கொள்கைக்காக உயிர் துறக்கவும் தயாரானேன்.

ஆனால் நாதுராம் கோட்சேவின் வாழ்வின் மிக சுவாரசியமான பகுதி துவங்குவது ஜனவரி 30 1910, காந்தியின் கொலைக்கு பிறகுதான்,

ஒரு வகையில் பார்த்தால் நான் வாழ்ந்தது 655 நாட்கள் மட்டுமே ஜனவரி 30 1948 முதல் நவம்பர் 15 1949 வரை மட்டுமே, ஜனவரி 30இன் விளைவே ஜனவரி 13,