PDA

View Full Version : நரகத்தை பேசுவதால் என்ன பயன் ?



nandagopal.d
22-02-2013, 12:29 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR7wWGoXk5AZ5PFBV-iFrbSGPbk6CFX_xasC1Ep8nSIFEOAUPJFRA

நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?
******
ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்.
******
உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.
******
மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
******
உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?
******

சுகந்தப்ரீதன்
24-02-2013, 05:24 PM
நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?வாஸ்த்துவமான பேச்சு..!!


ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும். பசித்தவனிடம் பாராயணம் பண்ணாதேன்னு சொல்றது சரி..!!


உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. இது பூசிமொழுகி பொறுப்பை தட்டிகழிக்குற பேச்சு.. செல்லாது..செல்லாது..!!


மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.அவ்வளவு நம்பிக்கை இருப்பவர்கள் தற்கொலை செய்வார்களா?.. இது அதீத கற்பனை..!!


உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?ஒருவாசகம்ன்னாலும் இது திருவாசகம்..!!:icon_b: