PDA

View Full Version : பரிந்துரைக்கும் புத்தகங்கள்



ரமணி
20-02-2013, 12:18 PM
பரிந்துரைக்கும் புத்தகங்கள்

வியாச மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் மூலத்தில் உள்ளது உள்ளபடியே ’கறந்த பால் கறந்தபடி’ தரும் புத்தகங்கள் தமிழில் உள்ளனவா? மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கே.எம்.கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த சிறைப்பினை யுடையதாகக் கருதப்படுகிறது. தமிழிலும் இத்தகைய புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்டன என்பது ’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமத்திலிருந்து இப்போது தெரிகிறது.

வியாச பாரதத்தை ஶ்ரீ ம.வீ.ராமாநுஜாச்சாரியார் எனும் மேதை 1930-களிலும், வால்மீகி ராமாயணத்தை ஶ்ரீ நடேச சாஸ்திரியார் 1900-இலும் பதிப்பித்தார். இந்தப் பழைய, அரிய பதிப்புகள் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்துள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட வலைதளச் சுட்டியை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு அதன்பின் வரும் முகவரியில் தொடர்புகொள்வார்களாக:

’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமம்
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/EOCiLP2InKY

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு (http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post_9.html)

முகவரி:
Sri S.Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

குறிப்பு:
நான் இன்று வாங்கியபோது வா.ரா. ஆறு காண்டங்களும் (விலை ரூ.900) கிடைத்தன. வி.பா.வில் ஒன்பதுக்கு முதல் நான்கு பாகங்களே கிடைத்தன (ஒவ்வொன்றும் ரூ.450). திரு. வெங்கட்ரமணனை நான் இன்றுதான் முதல்முறையாக சந்தித்தேன். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பரிந்துரைப்பதில் எங்களுக்குள் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*****

சுகந்தப்ரீதன்
21-02-2013, 05:34 PM
தங்களின் பரிந்துரையும் புரிந்துரையும் கண்டு அகமகிழ்ந்தோம் ஐயா..!!:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
21-02-2013, 06:18 PM
இனிமையான தகவல்!
இதுபோல் உபநிடதங்கள் மொழிபெயர்ப்பு பற்றிய தகவலறிந்தால் தாருங்கள்.
நன்றி!

ரமணி
22-02-2013, 12:49 AM
பத்து முக்கிய உபநிடதங்கள் மற்றும் பிற சிறிய உபநிடதங்கள் எல்லாவற்றின் பத-பாடத்துடன் கூடிய தமிழ் மொழிபெயர்ப்பை நீங்கள் இராமகிருஷ்ண மடம் பிரசுங்களில் வாங்கலாம்.


இனிமையான தகவல்!
இதுபோல் உபநிடதங்கள் மொழிபெயர்ப்பு பற்றிய தகவலறிந்தால் தாருங்கள்.
நன்றி!