PDA

View Full Version : என் வீட்டு காகங்கள் கரைவதில்லை



Ravee
16-02-2013, 06:09 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/House_Crow_Port_Sudan.jpg/360px-House_Crow_Port_Sudan.jpg

என் வீட்டு காகங்கள் கரைவதில்லை

அம்மா சொல்வார் முன்பு ...
பார் அத்தை வரப்போகிறாள் இன்று
முன் முற்றத்தில் காகம் கரைகிறதேன்று
சரியாக அத்தை வருவாள் ... அன்று
அத்தை கொடுத்த வடையை
அன்பாய் தருவாள் காக்கைக்கு

அதே நினைவில் மூழ்கி கிடந்த போது
வாசல் கதவருகே காக்கையின் சப்தம்
அம்மாவின் நினைவில் இருந்த நான்
மனைவியிடம் சொன்னேன்
பார் உன் அத்தை வரப்போகிறார் இன்று
காகம் கரைகிறதேன்று

அவள் கையில் இருந்த கரண்டி
காகத்தை நோக்கி பறக்க
காகமும் பறந்தது ..............................
அன்று தொட்டு இன்றுவரை
என் வீட்டு காகங்கள் கரைவதில்லை ...
எவரும் வீட்டுக்கு வருவதில்லை ............

jayanth
17-02-2013, 02:27 AM
யதார்த்தம்...!!!

ஓவியன்
17-02-2013, 06:13 AM
இப்போதெல்லாம் காகங்களுடன் அந்த நம்பிக்கையும் காணாமல் போய் விட்டதே....

அலை பேசி கோபுரங்களால்...!!!

இராஜேஸ்வரன்
18-02-2013, 03:47 AM
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் (படம் பிரமாதம்).

இராஜிசங்கர்
18-02-2013, 05:32 AM
அழகாய்ச் சொன்னேர்கள் ரவி.

இப்பொழுதெல்லாம் உறவினர்கள் என்று யார் வருகிறார்கள் வீட்டுக்கு? யார் திருமணத்திலாவது பார்த்தால் தான் உண்டு. பெரும்பான்மையான உறவுகள் இப்பொழுது முகநூலின் 'லைக்'குகளில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

மதி
18-02-2013, 08:25 AM
அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்.. :)

M.Jagadeesan
18-02-2013, 08:57 AM
ரவியின் மீள்வரவுக்கு நன்றி. இப்பொழுதெல்லாம் கரண்டிகள் , காக்கைக்கு மட்டும் குறி வைக்கப்படுவதில்லை; எதிர்த்துப் பேசும் கணவனுக்கும் கூட குறி வைக்கப்படுகின்றன.

இராஜிசங்கர்
18-02-2013, 10:12 AM
அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்.. :)

ஹ ஹா.. செம மதி அண்ணா!

Ravee
19-02-2013, 03:16 AM
அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்.. :)

ஆமாம் மதி காக்கைக்கும் எனக்கும் பிரியாணி கிடைத்து இருக்கும் .... (காக்கா பிரியாணி இல்லை ) .... :)

இராஜிசங்கர்
19-02-2013, 03:36 AM
ஆமாம் மதி காக்கைக்கும் எனக்கும் பிரியாணி கிடைத்து இருக்கும் .... (காக்கா பிரியாணி இல்லை ) .... :)

ஏன் ரவி சார், மதி நல்ல மனுஷன்...அவரைப் போய் காக்கைன்னு சொல்றேங்க? பாவம் அவர் நேற்றிலிருந்து சோகத்தில இருக்காராம்! :lachen001:

கீதம்
25-02-2013, 12:07 AM
விருந்தோம்பும் பண்பு காலப்போக்கில் நம்மிடையே குறைந்துகொண்டு வருவதைச் சுட்டும் அழகான கவிதை.

கவிதையைக் காட்சிப்படுத்தும் படம் கூடுதல் அழகு. பாராட்டுகள் ரவி. அடிக்கடி வாங்க.

(மதியின் பின்னூட்டம் ரசிக்கத்தக்க முன்னோட்டம். :) )