PDA

View Full Version : சுரேஷும் ஒரு கார்பரேட் மேனேஜரும்



arun karthik
16-02-2013, 02:45 PM
கல்லூரி படிப்பு முடிந்து, இந்தியாவின் பிரபல ஐ .டி கம்பனியில், சுரேஷ் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாத காலமே ஆகி இருந்தது . அவனது திறமையால் அனைவரிடத்தும் நற்பெயர் பெற்றிருந்தான் .

ஒரு நாள் அவனது மேனேஜெரிடம் இருந்து அழைப்பு வந்தது.
"உங்களுடைய ப்ரோமோஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணனும். நாளை மதியம் ஒரு மணிக்கு என்னை சந்திக்க இயலுமா?".

கண்டிப்பா வரேன் சார்.

சுரேஷுக்கு ஒரே மகிழ்ச்சி. தனது அம்மாவும் தங்கையும் இதனால் மிகுந்த மகிழச்சி அடைவார்கள் என. ஆம் அவனுக்கு அப்பா இல்லை. சுரேஷின் வருமானம் மட்டுமே அவன் குடும்பத்திற்கு ஒரே அனுகூலம்.

மறு நாள் மதியம் 1 மணிக்கு, அவன் மேனேஜர் அறைக்கு முன், மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தான். மேனேஜர் வந்ததும் சுரேஷை உள்ளே அழைத்தார்.

சுரேஷும் உள்ளே சென்று அமர்ந்தான்.

நீங்க பள்ளி மற்றும் கல்லூரியில் எப்படிப்பட்ட மாணவன் சுரேஷ்?

ரொம்ப நல்ல மாணவன் சார். காலேஜ் ல கூட நான் யுனிவேர்சிட்டி ரேங்க் சார்.

உங்களுடைய மார்க் சீட் நீங்க ரேங்க் ஹோல்டர்னு சொல்லுது. ஆனா உங்க background check நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லலையே.

சுரேஷுக்கு அந்த AC அறையிலும் முகமெல்லாம் வியர்த்தது .

உங்க மேல ஒரு போலிஸ் கேஸ் இருக்கு.

எஸ் சார். எங்க அப்பாவோட பழைய வண்டிய வித்து தான் நான் ஒரு செமஸ்டர் காலேஜ் fees கட்டினேன். வண்டிய விற்கும் போது RC book ல பேர் மாத்தனும். எனக்கு அப்ப அது தெரியல. வண்டிய வாங்கினவன் எங்கயோ கொண்டு போய் இடிச்சிட்டு கடைசில பழி என் மேல வந்திருச்சு. ஆனா கோர்ட் கேஸ் எல்லாம் முடிச்சு fine மட்டும் கட்டிட்டு வந்துட்டேன் சார்.

இத ஏன் நீங்க எங்க கம்பெனி கிட்ட முதலே சொல்லல?

"உங்க company க்கு முன்னாடியே நான் 3 கம்பெனில செலக்ட் ஆனேன். அவங்க கிட்ட சொன்னேன். ஆனா கேஸ் அப்டிங்கற ஒரே காரணத்துனால என்ன reject பண்ணிட்டாங்க . என் அம்மாவும் தங்கையும் என்ன நம்பி தான் இருக்காங்க. எனக்கு வேற வழி தெரில சார்." என சுரேஷ் கூறினான் தழு தழுத்த குரலில்.

நீங்க என்ன சொன்னாலும் நான் ஏத்துக்கற சூழ்நிலைல இல்ல.உங்க மேல கேஸ் இருக்கறது மட்டும் நம்ம American client க்கு தெரிஞ்சா அவ்ளோதான். பேசாம நீங்க கிளம்புங்க.
நீங்களா கிளம்பிட்டா நல்லது. நாங்க வெளிய அனுப்பினா, அப்பறம் நீங்க எங்கயும் வேலைக்கு சேர முடியாது. முடிவு உங்க கைல தான் இருக்கு.

"சார் என் வருமானத்த நம்பி தான் என் குடும்பமே இருக்கு. please சார். கொஞ்சம் உதவி பண்ணுங்க. ஒரு செடி வளர்ந்து மரமாகி பலன் தர்ற நேரத்துல, இப்படி வேரோட வெட்டிராதிங்க சார் " என்று சுரேஷ் கெஞ்சினான் கண்களில் கண்ணீரோடு.


"please . நீங்க டென்ஷன் ஆகாதிங்க. முதல்ல போய் கொஞ்சம் தண்ணி குடிங்க.
தண்ணி குடிச்சிட்டு அப்பறமா கிளம்புங்க.ஒண்ணும் அவசரம் இல்லை" என்றார் மேனேஜர் .

"சார்!" என்றான் சுரேஷ்.

"We are corporates. No sentiments. " என்று கூறியவாறு மேனேஜர் வெளியே நடந்தார்.

மேனேஜர் நாற்காலியில் ஒரு நாளிதழ் இருந்தது. அதில் அதே கம்பெனியின் CEO எனப்படும் முதலாளி செய்த பல்லாயிரம் கோடி நிதி மோசடி பற்றிய செய்தி காணப்பட்டது.
சுரேஷ் சிந்தித்தான் ,"இவர் எல்லாம் முதலாளியாக இருக்கும் போது, என்னால் ஏன் சொந்தமாக தொழில் செய்து நல்ல முதலாளியாக மாற முடியாது? நிச்சயம் முடியும் " என தன்னம்பிக்கையுடன் நடந்தான்.

arun
16-02-2013, 02:49 PM
முதலாளிக்கும் பண முதலைகளுக்கும் நீதி நியாயம் எல்லாம் என்னவென்றே தெரியாதே ! சுளீர் கதை பாராட்டுக்கள்

jayanth
17-02-2013, 02:33 AM
மாமியார் உடைத்தால் மண் சட்டி...

மருமகள் உடைத்தால் பொன் சட்டி...
.
.
.
அதுதானுங்க கார்பரேட் கலாச்சாரம்...

முரளி
17-02-2013, 03:04 AM
நல்ல கருத்து. இந்தியாவின் நம்பர் 1 ஐ .டி கம்பனியில் என்று குறிப்பிட்டு சொல்வதை தவிர்த்திருக்கலாமோ? முடியுமானால், பிரபல ஐ .டி கம்பனியில் என்று சொல்வது நன்றாக இருக்குமோ?

பாராட்டுக்கள். அழகான சின்ன கதை.

arun karthik
17-02-2013, 03:56 AM
முரளி நீங்க சொன்னது சரி. number 1 என்று சொல்லும்போது அது ஒரு குறிப்பிட்ட கம்பனியை விமர்சிப்பது போல் ஆகிவிடும். சுட்டி காட்டியதற்கு நன்றி.

இராஜிசங்கர்
17-02-2013, 10:32 AM
சரியாச் சொன்னேங்க அருண்.

ஐ.டி துறையில் 'எமோஷனல் கூடாது..சென்டிமென்ட் கூடாது' என்கிறார்களே, பின் எப்படி மனிதர்களை வைத்து வேலை செய்ய முடியும்? இவையிரண்டும் இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா என்ன! அப்படி இல்லாமல் இருந்தால் அவன் மனிதனா என்ன!

இப்படியாக இளைஞர்களைப் பழக்கப்படுத்தியதால்தான், அவர்களுக்கு சமுதாயம் பற்றி ஒரு பார்வை இல்லாமல், அதன் தவறுகளைக் குறித்து ஒரு கோபம் இல்லாமல் போகிறதா என்ற ஐயம் எழுகிறது.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

மும்பை நாதன்
01-09-2013, 04:33 PM
கதையின் இறுதிப்பகுதியில் ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்து நன்றாக நிறைவு செய்து இருக்கிறீர்கள்.

பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்