PDA

View Full Version : ஆனாலும் நேசிக்கிறேன்....



இராஜிசங்கர்
15-02-2013, 11:22 AM
ஒவ்வொரு முறையும்..
உன் வருகைக்காகவே
வாசல் கதவைத் திறக்கிறேன்;
நீயோ - சாத்திய
சாளரங்களைப் பார்த்தபடியே கடக்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் உதடசைவிற்காகவே
உரையாடல்களைத் தொடங்குகிறேன்;
நீயோ - இதழ்களின்
இறுமாப்பில் இன்பம் காண்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் தோட்டப்பூக்களின்
தோற்றங்கள் வசீகரம் என்கிறேன்;
நீயோ -சருகுகளின்
சன்னதியே சாரம் என்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் அருகில்
அமர்வதே ஆனந்தம் என்கிறேன்;
நீயோ - தனிமையின்
தவிப்பைத் தேடியே அலைகிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் இதயத்தை
இன்றாவது திறப்பாயா என்கிறேன்;
நீயோ - ஏமாற்றச்சிறகினில்
ஏற்றி அனுப்பி வைக்கிறாய்;

அடே அன்பா!
உனக்குத் தெரியுமா?
முன்னைவிட உன்னை
அதிகம் நேசிக்க வைப்பதும் - இவைகள் தானென்று!

கலைவேந்தன்
15-02-2013, 12:41 PM
இதயத்தை நனைய வைக்கும் இனிமையான வரிகள். ஒவ்வொரு வரிகளிலும் தான் வைத்த அளவற்ற நேசமும் அதற்கான பதிலாக கிடைக்கின்ற உதாசீனங்களின் வலிகளும் தெரிகின்றன. இத்தனை உதாசீனங்களுக்குப் பின்னும் மேலும் மேலும் நேசம் அதிகரிப்பது வியக்கத்தக்கதல்ல. காதல் என்பது ஒருமுறைதான் ஒருவர் மேல் மலரும். பின்னர் நாம் சருகாகின்ற வரையில் நமைவிட்டு அகலாது அந்த நேசம்.

இனிய கவிதைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ராஜி.

இராஜிசங்கர்
15-02-2013, 03:17 PM
நன்றிங்க கலை ஐயா....

அப்புறம், எப்படி இருக்கேங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!

மதி
16-02-2013, 12:36 AM
நல்ல கவிதை.. வலி மிகுந்த வரிகள்..


இன்னும் எழுதுங்கள் ராஜி

jayanth
16-02-2013, 02:19 AM
படித்தேன்... ரசித்தேன்... தேன்...!!!

இராஜிசங்கர்
16-02-2013, 01:57 PM
நன்றிங்க மதி

இராஜிசங்கர்
16-02-2013, 02:00 PM
நன்றிங்க அண்ணா..


படித்தேன்... ரசித்தேன்... தேன்...!!!

பார்த்து பார்த்து...சுகர் கூடி விடப் போகிறது..........

ஜான்
17-02-2013, 01:10 AM
நினைத்த கருப்பொருள் வார்த்தைகளில் வெகு லாகவமாக வெளிப்பட்டிருக்கிறது...

ஈர்ப்பு பற்றிய மிகக் கடினமானதொரு விஷயம் வெகு இதமாக சொல்லப் பட்டிருக்கிறது

நன்று ராஜி சங்கர்

jayanth
17-02-2013, 02:23 AM
நன்றிங்க அண்ணா..



பார்த்து பார்த்து...சுகர் கூடி விடப் போகிறது..........



கட்டுப்பாட்டுலே இருக்குங்க...!!!

இராஜிசங்கர்
17-02-2013, 03:32 AM
நன்றிங்க ஜான் சார்!

இராஜிசங்கர்
17-02-2013, 03:33 AM
கட்டுப்பாட்டுலே இருக்குங்க...!!!

:aktion033:

vasikaran.g
17-02-2013, 07:37 AM
ஆனாலும் நேசிக்கிறேன் ...

வளிக்கே வாசித்தபின்
வரும் வலி .!

இராஜிசங்கர்
17-02-2013, 10:23 AM
ஆனாலும் நேசிக்கிறேன் ...

வளிக்கே வாசித்தபின்
வரும் வலி .!

:) .....

கீதம்
25-02-2013, 12:11 AM
கண்மூடித்தனமான அன்பு என்று இதைத்தான் சொல்வார்களோ? :confused:

உதாசீனப்படுத்தும் காரணிகள் எல்லாமே இங்கு உன்னதமாய்க் கொண்டாடப்படுகின்றன.

மனத்தின் ஆழத்தில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் அதீத அன்பால் மட்டுமே அத்தனையும் சாத்தியம்.

மனந்தொட்ட வரிகளுக்கு பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
25-02-2013, 03:10 AM
கண்மூடித்தனமான அன்பு என்று இதைத்தான் சொல்வார்களோ? :confused:

உதாசீனப்படுத்தும் காரணிகள் எல்லாமே இங்கு உன்னதமாய்க் கொண்டாடப்படுகின்றன.

மனத்தின் ஆழத்தில் வேர்விட்டு வளர்ந்திருக்கும் அதீத அன்பால் மட்டுமே அத்தனையும் சாத்தியம்.

மனந்தொட்ட வரிகளுக்கு பாராட்டுகள் இராஜி.


நன்றிங்க அக்கா

maniajith007
05-03-2013, 03:15 PM
நல்ல கவிதை

இராஜிசங்கர்
06-03-2013, 05:38 AM
நல்ல கவிதை

நன்றிங்க

ராஜா
07-03-2013, 11:35 AM
அடே அன்பா!
உனக்குத் தெரியுமா?
முன்னைவிட உன்னை
அதிகம் நேசிக்க வைப்பதும் - இவைகள் தானென்று!

நல்லதொரு கவிதைக்கு இலக்கணம் அதன் முத்தாய்ப்பில் மொத்தக்கவியின் சாரத்தையும், கூடவே ஒரு சின்ன ஆச்சர்யத் திருப்பத்தையும் சரியான விகிதத்தில் கலப்பதுதான்..

உங்களதும் அவ்வாறானதே.. பாராட்டுகள்..!

இராஜிசங்கர்
07-03-2013, 03:50 PM
நல்லதொரு கவிதைக்கு இலக்கணம் அதன் முத்தாய்ப்பில் மொத்தக்கவியின் சாரத்தையும், கூடவே ஒரு சின்ன ஆச்சர்யத் திருப்பத்தையும் சரியான விகிதத்தில் கலப்பதுதான்..

உங்களதும் அவ்வாறானதே.. பாராட்டுகள்..!

நன்றிங்க ராஜா சார்