PDA

View Full Version : புன்னகை



Sasi Dharan
13-02-2013, 12:15 PM
நிலையான அழகை கொண்டது
உன் புன்னகை...
நீண்ட கனவுகள் சிறகடிக்க
நீடிக்கிறது
உன் புன்னகை....

நிலை தடுமாறி உழல்கையுலும்
மீண்டு மெல்லிய
புன்னகைக்கிறது....

இதயம் இளைத்தாலும்
கடைஇதழ்களில்
வந்து தொனிக்கிறது
இந்த புன்னகை...

பொய்யிலும்.... போலியிலும்
பொலிவிழந்தாலும்
நிறம் மட்டும்
மாறவில்லை...
நிலையானது
இந்த புன்னகை...

காலக்கோட்டில் களை இழந்தாலும்
கலைந்துசெல்ல மறுக்கிறது
மெல்லிய உன்
மந்தகாச புன்னகை...

நிலையானது உன் புன்னகை
ஒவ்வொருமுறை நீ உனக்காக
புன்ன்கைக்கும்போதும்...!