PDA

View Full Version : இனி எல்லாமே மின் வணிகம் (E-Commerce) -3



lavanya
12-01-2004, 07:08 PM
மின் வணிகத்தின் சட்ட சிக்கல்கள்

எளிமையாக இருக்கும் எல்லாமே இனிமையாக இருப்பதில்லை. மின் வணிகம் வாழ்க்கையை
சுருக்கி வெளியே போய் எதையும் தேடியலைந்து பெறாமல் வீட்டிலிருந்தபடியே என்ன தேவை என்றாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மிக சிறந்த செய்திதான்..ஆனால் இதில்
எங்காவது கொஞ்சம் பிசகி சிக்கலானால்.....?

1. மரபுமுறை வணிக ஒப்பந்தத்தில் இருவர் நேரில் சந்தித்து கையொப்பம் இடுகின்றனர். மின்
வணிகத்தில் இன்னார் என்று தெரியாமலேயே அவரைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே
ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்.இத்தகைய்ய மெய் நிகர் நபர்களை (Virtual Persons)
ஏற்கனவே உள்ள ஒப்பந்த சட்டங்கள் ஏற்று கொள்ளுமா...?

2. மின் வணிகத்தில் கையொப்பம் இல்லை.தனிமறைக்குறி எனப்படும் Digital Signature - ஐ
மரபுவழி சட்டங்கள் ஏற்றுக்கொள்ளுமா...?

3. மின் வணிகத்தில் ஈடுபடும் நுகர்வோர்,விற்பனை நிறுவனம்,பண அட்டை,வங்கி,இணைய
அங்காடி உள்ள இணைய தளம் இவையெல்லாம் வெவ்வேறு நாடுகளில் இருக்க முடியும்.
மின் வணிகப்பரிமாற்றம் எந்த நாட்டில் நடைபெற்றதாக எடுத்து கொள்வதா..?ஏதேனும்
சிக்கல் ஏற்பட்டால் அது தொடர்பாய் வழக்கு தொடர நேரிட்டால் எந்த நாட்டு நீதி
மன்றத்தில் வழக்கு தொடர்வது...?

4. வணிக நடவடிக்கை முழுதும் இணையம் வழியாக நடந்து முடிந்துவிடும்.விற்பனைக்கு
எந்த நாட்டு சட்டப்படி வரி விதிப்பது...?அந்நிய செலவாணி சட்டம் இதில் தலையிடுமா?
அப்படி தலையிட்டால் அது எந்த நாட்டு சட்டம்.. வாங்கிய நாடா விற்ற நாடா...?

5. பதிப்புரிமை பெற்ற பல தகவல்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன.இசைப்
பாடல்கள் MP3 வடிவத்தில் மாற்றப்பட்டு இணையம் மூலம் விநியோகிக்கப்படுகின்றனவே..
இவை பதிப்புரிமை மீறிய செயல்களா...?

6. இலவச இணையத்தளங்கள் மூலம் விநியோகிக்கப்படும் இது போன்ற பல மென்பொருள்
பற்றிய முழுமையான மின் வணிக சட்டம் என்ன? அதுபோல் உள்ள இணையத்தளத்தை
நடத்துபவர் யார் என்று அறிவது அவ்வளவு எளிதானதல்ல...அவர்களை எந்த சட்டம் தனது
வரையறைக்குள் கொண்டு வர முடியும்...?

7. பண அட்டை மூலம் நடைபெறும் பணமாற்றத்தில் சிக்கல் இல்லை.Smart Card,Digital
Money ஆகியவற்றில் Digital Value Unit (DVU) என்ற நாணயம் பயன்படுத்தப்படுகிறது.
நாணயங்களை வெளியிடும் உரிமை அரசாங்கத்துக்கே உண்டு.இது போல் துடிம பணத்தை
தனியார் வங்கிகள் வெளியிட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்காதா...?

இணையத்தின் மூலம் உருவாகியுள்ள மாயவெளியில் ஒரு மெய்நிகர் நாடு அமைந்துள்ளது
(Virtual State in Cyber Space).இந்த நாட்டுக்கு இணைய சட்டங்கள் தேவை.இதற்கான முதல் முயற்சியை ஐ.நா. மேற்கொண்டது.மின் வணிகத்தை ஒழுங்குபடுத்த 1996 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் இயற்றப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1977 ஆம் ஆண்டு ஐ.நாவின் உறுப்பு நாடுகளால் ஜனவரி 30 அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இணையசட்டங்கள் என அழைக்கப்படும் Cyber Laws இயற்றப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தை ஒட்டி இந்திய நாடு தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சட்டங்களை 2000 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஏற்றுக் கொண்டது. அது தொடர்பான
பல சட்டங்களையும் இந்தியா நிறைவேற்றியுள்ளது.பால நாடுகளிலும் நிறைவேற்றப்பட்ட
சட்டங்கள் இத்திசை வழியில் ஒரு முன்னோடி என்றே கூற வேண்டும்.ஆனால் இன்னும்
இதில் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

சில கொசுறு செய்திகள்.

1. EDI எனப்படும் மின்னணு தகவல் பரிமாற்றத்தின் மூலம் தற்போது வணிகத்தில் 27 சதவீதம்
இடத்தை மின் வணிகம் பிடித்து 2001 வரை 70 சதவீதமாக உயரும் என முன்னால்
கணக்கிடப்பட்டிருந்தது..இப்போது இன்னும் உயரும் என கருதப்படுகிறது.

2. 1991 ல் புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் EDI வளர்ச்சிக்கான
நடவடிக்கைக்கள் இன்னும் விரைவாக செயல்படுத்தப்பட்டு சுங்கத்துறை,துறைமுகம்,
விமானப்போக்குவரத்து துறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

3. மதிப்பேற்று பிணையம் மூலம் நடைபெறும் மின் வணிக மதிப்பு 1999 ஆம் ஆண்டுவரை
தோராயமாக 355 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டு 2000 ஆண்டு மட்டும் மின்
வணிக மதிப்பு 200 பில்லியன் டாலர் என கணக்கிடப்படிருக்கிறது..இது ஒரு சிறந்த
வளர்ச்சி என பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

puppy
12-01-2004, 10:07 PM
நல்ல செய்திகள் லாவண்யா........அதுக்குள்ளே சட்ட சிக்கல்களுக்கு போய்ட்டீங்க.......

EDI - Electronic Data Interchange என்பதாகும்.......

இளசு
12-01-2004, 10:23 PM
பாரதி சொன்னது போல் 2-3 தடவை அல்ல
நாலைந்து தடவை படிக்கணும் போல லாவ்..

நாளைக்குள்ள படிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு..

நல்ல மாணவனாக்கும் நான்...

poo
14-01-2004, 03:10 PM
எட்டாக்கனிபோல.. விளங்காமல் இருந்தவைகள் விளங்க ஆரம்பித்ததில் மகிழ்ச்சி!!

நன்றி அக்கா!!

இளசு
14-01-2004, 11:24 PM
மின் வணிகத்தின் முன்னோடி என தொலைபேசி வணிகம்/ வங்கிப்பணிகளைச்
சொல்லலாமா லாவ்?
இன்று என் உதவியாளர் என் விவரங்களைச் சொல்லி (நான் பிஸியாக்கும்!!)
என் கணக்கு குறித்து, "நானாகவே" விவரங்கள் பெற்றார்!!!!
சில சங்கேத எண்களும், சொற்களும் சொன்னவுடன்
"செக்யுரிட்டியை" தாண்ட முடிந்தது அவரால் "நானாகவே"!

வங்கி மேலாளரைச் சந்தித்து, காபி உபசரிப்புடன் சென்ற வேலையை
பந்தாவாய் முடிக்கும் திருப்தி இதில் இல்லை..

puppy
14-01-2004, 11:30 PM
இந்த ரொம்ப தப்பு.......இந்த மாதிரி பண்றது தான் மத்தவங்களையும் தப்பு செய்ய தூண்டும்......சில விஷயங்களை நாமே செய்வது நல்லது....

இளசு
15-01-2004, 12:08 AM
ஒப்புக்கொள்கிறேன் பப்பி அவர்களே..

madhuraikumaran
15-01-2004, 03:31 AM
நல்ல தகவல்கள்...

E D I - இன்று B2B எனப்படும் நிறுவனங்களுக்கிடையே நிகழும் தகவற் பரிமாற்றத்தின் ஒரு முக்கிய அம்சம்.