PDA

View Full Version : முக மூடி



arun karthik
10-02-2013, 01:48 PM
மீனாட்சி தன் கணவர் சுந்தரத்திடம்,"ஏங்க, நம்ம வீட்டு வேலைக்காரி சரியாவே வேலை செய்ய மாட்டேங்கறா. பேசாம அவளுக்கு பதிலா வேற யாரையாவது வேலைக்கு சேர்த்துக்கலாமா?" என்றாள்.

"அடி சும்மா இருடி. நாம தர்ற கம்மியான சம்பளத்துக்கு வேற யாருமே வர மாட்டங்க;அது மட்டும் இல்ல, இந்த மாசம் என் கிட்டேயும் பணம் சுத்தமா இல்ல " என்று சுந்தரம் கூற, "நான் சொல்லி நீங்க எப்ப தான் கேக்கறீங்க?" என்று மீனாட்சி முணுமுணுத்தவாறு சென்று விட்டாள்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை, சுந்தரம் அவசரமாக எங்கோ புறப்படுக்கொண்டு இருந்தார்.
அப்பொழுது, வேலைக்காரி சிவகாமி, சுந்தரத்திடம், "ஐயா! என் பையனுக்கு யூனிபார்ம் வாங்க பணம் இல்லைங்க. ஒரு முந்நூறு ரூபா கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்.வேணும்னா அடுத்த மாசம் சம்பளத்துல பிடிச்சுகோங்க" என்றாள்.

சுந்தரம் கனத்த குரலில், "இங்க மட்டும் என்னம்மா வாழுது? எனக்கே இந்த மாசம் ரொம்ப டைட்டு தான். போ! போய் வேலைய பாரு! அடுத்த மாசம் பார்க்கலாம்." என்றார்.
தன் மகனுக்கு சீருடை வாங்க என்ன செய்வதென்று தெரியாமல்,ஏமாறிய முகத்துடன் விலகினாள் சிவகாமி.

அந்த நேரத்தில் சுந்தரத்தின் செல்போன் சிணுங்க," இதோ வந்துட்டே இருக்கேன்.எனக்கும் ஒரு கை போடுங்கடா. போன மாசம் விட்ட பத்தாயிரம் ரூபாயை எடுக்காம விட மாட்டேன்!" என்று கூறியவாறே தான் ஒளித்து வைத்திருந்த பத்தாயிரம் ருபாயை பையில் வைத்து கொண்டு அவசரமாக வெளியே கிளம்பினார்.

ravisekar
21-07-2015, 02:46 PM
priorities got wrong..
ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் உறுத்தும் உள்மனசாட்சி.
அதை சமாளிபிகேஷன் செய்ய இந்த முகமூடிகள்.

உரித்துக்காட்டிய நறுக் கதை. பாராட்டுக்கள் அருண்கார்த்திக்.