PDA

View Full Version : காதல் என்றால்...



இராஜிசங்கர்
10-02-2013, 08:20 AM
காதல் என்றால்…
சொர்க்கத்தின் கள்ளச்சாவி;
ஈடில்லா ஆனந்தம் தரலாம்!

காதல் என்றால்…
கல்லறையின் கருகாமலர்;
பார்க்கப் படாமலே போகலாம்!

காதல் என்றால்…
உயிர்க்கற்றையின் முதலிழை;
அறுபடக் கூடாததாக இருக்கலாம்!

காதல் என்றால்…
கைம்பெண்ணின் நெற்றித்திலகம்;
அத்தனை ரகசியமானதாக இருக்கலாம்!

காதல் என்றால்…
கொலைகாரனின் கருணைமனு;
இன்றும் ஏற்கப்படாமல் போகலாம்!

காதல் என்றால்…
இருள்களின் ரகசியஒப்பந்தம்;
வெளியில் வேறுவேசத்தில் இருக்கலாம்!

காதல் என்றால்…
கனவுகளின் கைக்கூலி;
நியாயங்கள் இல்லாது இருக்கலாம்!

காதல் என்றால்…
உள்ளங்கை மச்சம்;
அதிர்ஷ்டத்தின் அழைப்பாய் இருக்கலாம்!

காதல் என்றால்…
குழந்தையின் வினாக்கள்;
விடைதெரிந்தும் பலநேரம் பதில்மறுக்கப்படலாம்!

காதல் என்றால்…
என்னவென்று துல்லியமாகச் சொல்ல முடியாது;
அது வார்த்தைக்குள் அடங்காத வடிவமாகவும் இருக்கலாம்!

மஞ்சுபாஷிணி
10-02-2013, 09:56 AM
காதலை பல விதமாய் அழகாய் சொற்களில் வடித்தது மிக அருமை ராஜிசங்கர்.....

அன்பு வாழ்த்துகள்.... வித்தியாச கவிதை....

இராஜிசங்கர்
10-02-2013, 11:15 AM
நன்றிங்க மேடம்! :cool:

அனுராகவன்
10-02-2013, 05:13 PM
:icon_b:அருமை...

ஜான்
11-02-2013, 12:45 AM
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத காதலை ஒரு வார்த்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றுள்ளீர்கள்!!
யாவற்றையும் அறிந்துகொள்ள இயலும் நாம்..ஒருசிலவற்றை உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்...அவற்றுள் காதலும் ஒன்று ....

jayanth
12-02-2013, 02:29 AM
காதலென்றால் இப்படியெல்லம் கூட நினைக்க முடியுமா...

வித்தியசமாக நினைத்ததற்கு பாராட்டுக்கள் ராஜி(ம்மா)...!!!

இராஜிசங்கர்
12-02-2013, 03:23 AM
உற்சாமூட்டிய அனைவர்க்கும் நன்றிங்கோ..:)

இராஜிசங்கர்
12-02-2013, 03:24 AM
காதலென்றால் இப்படியெல்லம் கூட நினைக்க முடியுமா...

வித்தியசமாக நினைத்ததற்கு பாராட்டுக்கள் ராஜி(ம்மா)...!!!

என்னடா அண்ணன் இன்னும் வரலயேன்னு பார்த்தேன்! நன்றிங்கண்ணாவ்...

vasikaran.g
17-02-2013, 07:43 AM
வித்தியாச வார்த்தைகளில்
வியாபித்த காதல் ..
மனம் மணம் இரண்டும்
மனதில் ஜனித்தது ..

இராஜிசங்கர்
17-02-2013, 10:20 AM
வித்தியாச வார்த்தைகளில்
வியாபித்த காதல் ..
மனம் மணம் இரண்டும்
மனதில் ஜனித்தது ..

நன்றிங்க வசி..

கீதம்
25-02-2013, 12:16 AM
இன்னதென்று எல்லைகளால் வரையறுக்கப்பட இயலாத வரைபடமாய் இங்கே காதல் கவிப்படம்.

வார்த்தைகளின் தேர்வு வியக்கவைக்கிறது. பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
25-02-2013, 03:07 AM
இன்னதென்று எல்லைகளால் வரையறுக்கப்பட இயலாத வரைபடமாய் இங்கே காதல் கவிப்படம்.

வார்த்தைகளின் தேர்வு வியக்கவைக்கிறது. பாராட்டுகள் இராஜி.

நன்றிங்க அக்கா