PDA

View Full Version : இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...



rema
08-02-2013, 03:26 AM
இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...

இன்றைக்கு மட்டுமல்ல. என்றைக்கும் நம் வாழ்வை வளமாக்கக் கூடிய ஒளவை அருளிய அழியாச் செல்வம்.
மூன்றாவது அவ்வையார், (அதென்ன 3..ம் ஒளவையார் என கேட்கிறீர்களா ? அதை முடிவில் சொல்கிறேன் ) ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.
. இதில் 91 அடிப்பாக்கள் உள்ளன. அனைத்திற்கும் நமக்கு விளக்கம் தெரியுமா என நம்மையே சோதித்து பார்ப்போமா?


கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது

ககர வருக்கம் ( என்றால் சிங்காரவேலன் பட பாடல் போல் க, கா, கி, கீ, கு கூ, கெ, கே,கை.....)

கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

கற்பு எனப் படுவது சொன்ன சொல் மாறாமை என்பதுதான் இதன் பொருள்.
இறுதிவரை உனக்கு நான் எனக்கு நீ ....என வாக்க்களித்துவிட்டுப்
பின் மாறுதல் கூடாது என்பது பொருள் என்று தான் நான் நினைக்கிறேன்...

சரி இப்போ ஒளவையார் களுக்கு வருவோம்

.அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.

திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.

ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். “ஒள’ என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. “அவ்வை’ என்று எழுதுவதே சரி.பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :
1. சங்க கால அவ்வை
2. அங்கவை – சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை

1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.

“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை – சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ என்று பாடி இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் தான் ‘சிவாஜி’ எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர்.

அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன.
அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்து கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடு வாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன.

அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள். ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்

குணமதி
11-02-2013, 01:46 AM
***அங்கவை – சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ என்று பாடி இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் தான் ‘சிவாஜி’ எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.***

பலருக்குத் தெரியாத உண்மை!
விளக்கம் தந்ததற்குப் பாராட்டு! நன்றி!

rema
18-02-2013, 03:54 AM
நன்றி குணமதி !!

rema
18-02-2013, 04:05 AM
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
Faultfinder becomes foe to every one

கெளவை சொல்லுதல் என்றால் குறைக் கூறுதல் என அர்த்தம்.எவ்வருக்கும் ..எல்லாருக்கும். பிறரிடம் அவர்களின் குறைகளை மட்டுமே ஒருவர் கூறிக்கொண்டிருந்தால் , விரைவில் அவர் அனைவருக்கும் பகையாவார்.

ஒரு வரியில் பெரிய , அரிய கருத்தினை இட்டு எழுதிய ஒளவை பிராட்டியை என்னென்று வியப்பது !

சுகந்தப்ரீதன்
19-02-2013, 05:02 PM
அவ்வை பற்றிய அரிய தகவலையும் கௌவை பற்றிய கூற்றையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ரேமா..!!

ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். “ஒள’ என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. “அவ்வை’ என்று எழுதுவதே சரி.
அதெல்லாம் சரி...

ஒரு வரியில் பெரிய , அரிய கருத்தினை இட்டு எழுதிய ஒளவை பிராட்டியை என்னென்று வியப்பது !இதுதான் வியப்பாயிருக்கு..!!:)

rema
25-02-2013, 03:11 AM
அவ்வை பற்றிய அரிய தகவலையும் கௌவை பற்றிய கூற்றையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ரேமா..!!

அதெல்லாம் சரி...
இதுதான் வியப்பாயிருக்கு..!!:)

அந்திமழையும் அவ் வையாரைப் பிடித்தபிணியும் விடாது. (அவ்வை என்ற சொல் முதிய பெண்மணி என்ற பொருளில் அமைந்துள்ளது.)

கூந்தலை யௌவைமார்கடாம் பணி விலர் பறித்தனர் (சீவக சிந்தாமணி)

ஆக, அவ்வை, ஔவை இரண்டும் கலந்தே பயன்பாட்டில் இருப்பது தெரிகின்றது.
நன்றி சுகந்தப்ரீதன் !!

rema
25-02-2013, 03:14 AM
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

Take measured steps and the world will hold you up .

நிதானித்து செயல்பட்டால் உலகம் நம்மை உயர்த்தும். நன்கு சிந்தித்து செயல்பட்டால் அக்காரியத்தின் சிறப்பே தனி.
அள்ளித் தெளித்த அவசரக்கோலம் போல் எடுக்கப்படும் அவசர முடிவுகள் பயனின்றிப் போய்விடும்.முன்னர் படித்த சம்பவம் ஒன்று....அண்ணா முதல்வராக இருந்த போது ஒரு முறை அவையில் காங்கிரஸ் உறுப்பினர் கருத்திருமன் என்பவர் முதல்வர் அண்ணாவிடம் கோபமுற்று "your days are numbered " எனறார். அதற்கு அண்ணா நிதானமாக "but our steps are measured "! என மறுமொழிக் கூறினார்....அவரின் நிதானமான அடிகள் தான் கொடிநாட்டுகின்றது அரை நூற்றாண்டுக்குப் பின்னரும். இயன்றவரை நாமும் முயற்சிப்போமே ? நிதானமாய் நடக்க...

rema
22-03-2013, 04:15 AM
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
Speak not of your penury even with friends.

உற்ற தோழனாக இருந்தாலும் அவனிடம் நம் ஏழ்மையை காட்டிக்கொள்ளக் கூடாது. தன் இல்லாமையை நன்பனிடம் காட்டாமல் இருத்தல் மிக உயர்ந்த பண்பு. ஈயென இரத்தல் இழிவானது, என்றால் நன்பனிடம் ஏழ்மையை தெரியப்படுத்துதல் இரத்தலுக்கு சமம் அல்லவா? நன்பன் உதவிட முன்வரக்கூடும்.நன்பனும் இல்லாமையில் இருந்து , நட்புக்காக செய்யவேண்டிய கட்டாயம் எழும் நிலை வந்தால் அங்கே இருவரும் துயரப்படும் படி நேரிடும்.
மிக உயர்ந்த பண்பை விளக்கும் இப் பா.. வை குழந்தைகளுக்கென எழுதிய ஒளவையார் பாராட்டுக்குரியவர்.

அனுராகவன்
17-08-2014, 02:52 AM
வாவ்! வாழ்த்துக்கள்..

ஸ்ரீசரண்
09-10-2014, 01:43 PM
அருமையான தகவல்கள்.

பகிர்ந்தமைக்கு நன்றி...