PDA

View Full Version : நிஜ நட்பே நீ எங்கே????



nandagopal.d
06-02-2013, 04:26 PM
http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/imagecache/tn/images/kavithai/images_96.jpg

கடைசியில் நகர்த்தும்
சதுரங்க விளையாட்டை போல்
நகர்ந்து கொண்டு இருக்கு
பரிதவிக்கின்ற
மௌனம்,
பசை போல்
ஒட்டி கொள்கிற
தருணம் அது
அற்ப சந்தோஷத்தில்
ஆடும்
விட்டில் பூச்சியாய்
ஒரு பெண்ணுக்காக
நீ,
என்றோ
பேசிய
உன் பேச்சு.
இன்னும்,
என் மனதை
கிழித்து கொண்டு
ரணங்கள்
ஆறாமல்
பரிதவிகின்றன.
உதவிகள்,
சொல்லி காட்டுவது
அழகல்ல என்று
நான் நினைக்கையில்.
நீயே,
சொல்லி கொண்டு
இருக்கிறாய்.
எனக்குள்,
இருக்கும் மனிதத்தை,
இன்னும் இருக்கிறது
என்னுள்
உன் நட்பின் கீதம்.
எப்பொழுது வருவாய்?
என்னிடம்
நிஜ நட்போடு.............

Sasi Dharan
13-02-2013, 11:31 AM
உண்மையான நட்பு என்பது அசைக்கமுடியாத ஆணிவேர் என்றுதான் நினைக்கிறோம்
ஆனால் அவை கூட சந்தர்ப்பவாதங்களாலும்.. காலத்தாலும் மாற்றப்பட்டுவிடுகின்றன... மறக்கடிக்கபட்டுவிடுகின்றன....!
நிஜம்தான்...
உண்மையான நட்பில் சந்தேகங்கள் மிகுந்த வேதனையான தருணங்கள்....
நல்ல ஆக்கம் பாராட்டுக்கள் நந்தகோபால்!

கலைவேந்தன்
13-02-2013, 01:22 PM
பெண் மோகம் கொண்ட பெண்பித்தர்களாலும் ஆண்களுக்காய் அலைகின்ற வெறிபிடித்த பெண்டிர்களாலும் உண்மையான நட்பைப் போற்றவும் முடியாது காக்கவும் முடியாது. சமயம் சந்தர்ப்பம் பார்த்து கிளைக்குக் கிளை தாவும் இம்மாதிரியான மனிதர்களால் நட்பைக் காத்திட ஒருக்காலும் முடியாது. மனதில் பழைய நினைவுகள் தோன்றி எப்போதாவது மனச்சாட்சி இடித்தாலும் அதைப் புறம் தள்ளிப் பித்துக் கொண்டு அலைவர்.

இத்தகையோரிடம் நட்பை எதிர்பார்ப்பது விழலுக்கிறைக்கும் வீண் தான்.

பாராட்டுகள் நந்தகோபால்.

ராஜா
03-03-2013, 08:22 AM
காசு புடுங்கி நட்பாப் போச்சுது நந்து..

காசு கொடுக்குறவரை உன்னைப்போல் உண்டாம்பாய்ங்க ; நிறுத்திட்டா, மண்ணை வாரி இறைப்பாய்ங்க..

வேடிக்கை மனிதர்கள்..

உங்கள் கவிதையின் இறுதியில் தொக்கி நிற்கும் நிஜநட்பு நிச்சயம் வெல்லும்..!

வெங்கி
03-03-2013, 08:34 AM
பாராட்டுகள்...