PDA

View Full Version : உள்ளே-வெளியே!!



poo
12-01-2004, 02:34 PM
இன்றைய செய்தித்தாளை புரட்டும்போது பல செய்திகள் படித்தவுடன் உள்ளுக்குள் இதை நினைத்து அதை சொல்லியிருப்பார்களோ என கற்பனை.. :wink:

நீங்களும் இதுபோல அடிக்கடி உணர்ந்திருப்பீர்கள்...
(ஆமாம்னு சொல்லுங்க மக்கா...தனியா என்னை அடி வாங்க வுட்றாதீங்க... :lol: )

செய்திச்சோலையில் கமெண்ட் அடித்தாலும்.. அடக்கி வாசித்தாக வேண்டும்.. (அப்ப்டீயா.... :roll: )

அங்கே இடம்பெறாத செய்திகளை.. பேச்சுகளை இங்கே தந்து கமெண்ட் அடித்தாலென்ன....

அடிக்கும் ஆட்டோவுக்கும் பயப்படாதவர்கள் என்னோடு கூட்டணி சேருங்களேன்.... :roll:

தண்டவாளத்துல வண்டிய வுடலாமா.... :lol: :lol:

---------------------------------

ஒவ்வொருவரும் 2 வோட்டுகளை சேர்த்தால் எளிதில் வெற்றி பெறலாம்- கொளப்பாக்கத்தில் தொண்டர்களிடையே ஜெ. பேச்சு!

என்ன சொல்றேன்னு நல்லா புரியுது இல்ல.... ஒருத்தருக்கு 2 வோட்டு!!...

:roll: :roll:

பெண்ணைப் பார்த்து பா.ஜ.க பயப்படுவது ஏன் - சோனியா!

ஜெ.வை சந்தித்து கூட்டணியைப் பற்றி பேசிப் பார்க்கவேண்டியதுதானே?!!

:roll: :roll:


4000- சிவில் சப்ளை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு- ரேஷன் கார்டு குறைப்பால் வேலையில்லை- தமிழக அரசு!

<span style='color:blue'>எல்லோருக்கும் "எச்" இவங்களுக்கு "நச்"- அரசு

."..உச்"- திருவாளர் பொதுஜனம்... !!</span>

:shock: :(


2-கதாநாயகர்கள் படத்தில் இனி நடிக்கமாட்டேன் - நடிகர் விக்ரம்!

நடித்தாலும்..நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு ஒரு டூயட் ஆடவுட மாட்றாங்களே மக்கா?!!

:roll: :(


எனக்கு அரசியல் தெரியும்... ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை- நடிகர் விஜயகாந்த்!

தமிழ்நாட்டுல 1.....24 அரசியல் கட்சிகள்..
அதுக்கு தலைவர்கள் 1...29
அதுல செயல்படறவங்க...5..6
செயல்படாதவங்க.... 4..8..
தொண்டர்கள்... 2 ....2....789..

-இப்படி கணக்கு வைச்சிருக்கிறவன் நான்.. எனக்கேவா?!!

:D :lol:

நிலா
12-01-2004, 03:27 PM
பூ கலக்கல்!அருமை!எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாஆஆஅ இருங்க அண்ணாச்சி! :D
பூ ஜனவரிப்போட்டி கோதாவுல குதிச்சாச்சுன்னு நினைக்கிறேன்! :wink:
பாராட்டுகள்!

puppy
12-01-2004, 03:48 PM
பூ நல்லா இருக்கு........

இளசு
12-01-2004, 09:54 PM
அருமை பூ.. தொடரவும்..

gankrish
13-01-2004, 04:38 AM
பூ... சூப்பரப்(பூ)

sara
22-01-2004, 03:20 AM
ஜெ.வை சந்தித்து கூட்டணியைப் பற்றி பேசிப் பார்க்கவேண்டியதுதானே?!!

."..உச்"- திருவாளர் பொதுஜனம்... !!
பூ கலக்கிட்டீங்க.. மேற்கண்ட வரிகளை படித்துவிட்டு நான் சிரித்த சிரிப்பு.. அப்படி சிரித்து ரொம்ப நாளாகிவிட்டது.

aren
22-01-2004, 03:28 AM
பூ கலக்கல்தான். ஆனால் பெண்களைப் பார்த்து பா.ஜ.க மட்டும் பயப்படவில்லை, நாமும் தானே. இல்லையா

rajeshkrv
23-01-2004, 11:45 AM
மூன்று மாநிலங்கள் வெற்றிக்கு பின் அத்வானி கூறியது இது தான் நாங்கள் இந்த வெற்றியை காட்டி தேர்தலை முன்கூட்டியே நடத்தவேண்டும் என்று கேட்க மாட்டோம் என்பது

ஆனால் ஒரு மாத இடைவெளியில் அவரே தேர்தல் விரைவாக வேண்டும் என்று கேட்கிறார்...??

அதே போல் எப்பொழுது பார்த்தால் சோனியா அயல் நாட்டவர் என்பதை தவிர பிரச்சாரத்தில் புதிதாக ஒன்றும் இல்லை இதை கூறியும் பெல்லாரியில் பா.ஜ.க தோல்வியுற்றது ..