PDA

View Full Version : நேர் கா(ன)ணல்



arun karthik
04-02-2013, 01:18 PM
செல்போனில் தன் நண்பனுடன் பேசிய படியே கார்த்திக்
வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான்.

"டேய் கார்த்திக், நீ அட்டென்ட் பண்ண போக போற 15-வது
interview டா இது. தயவு செஞ்சு correct timeக்கு
போய்டு. attend பண்ணி select ஆகலைனா பரவால்ல.
ஆனா நீ இது வரைக்கும் எந்த interview-வையும் correct
time la attend பண்ணவே இல்ல. எதோ ஒரு காரணம்
சொல்லி தப்பிச்சுட்டே இருக்கே! so be there on time.
உனக்காக கஷ்டப்பட்டு பேசிருக்கேன்,"- என அவன் நண்பன் அறிவுரை
கூறினான்.

"நா என்னடா மாமா பண்றது? நான் punctuala கிளம்பிடுறேன்!
ஆனா எதோ ஒரு தொந்தரவு. இந்த தடவ எப்படியும் போயிடறேன்.
இப்ப கட் பண்றேன்.Bye bye..." என கூறிக்கொண்டே நடந்தான்.

பஸ் ஸ்டான்ட் அருகில் ஒருவர் நெஞ்சில் கையை வைத்து
கொண்டு மூச்சை இழுத்துக் கொண்டு படுத்து கிடந்தார்.
உதவிக்கு ஒருவரும் இல்லை. கார்த்திக் சென்று "அண்ணே! என்ன
ஆச்சு" என வினவினான். அனால் அவரோ பேசும் நிலையில்
இல்லை என்பதை புரிந்து கொண்டான். அருகே கடையில்
சோடா வாங்கி தெளித்தான். ஹ்ம்ம். பலன் இல்லை. அடுத்து
அவரோ மூர்ச்சை ஆனார். அருகே இருந்தவர்கள் அனைவரும்
கார்த்திக்கை பார்த்து ஏளனமாக நகைத்தனர்.

இருந்தும் அவன் விடவில்லை . ஆட்டோவை அழைத்தான். அவரை
தூக்க முற்பட்டான். அவரோ எழுந்த பாடில்லை. மயக்கம் தெளியவே இல்லை.
கார்த்திக்கு தெரியும் அவன் இந்த inteview-க்கும்
போக முடியாதென்று. இருப்பினும் மனித நேயத்தோடு நடந்து
கொண்டான்.

திடீரென கீழே விழுந்தவர் எழுந்து உட்கார்ந்தார். கார்த்திக்குக்கு
அளவற்ற மகிழ்ச்சி. கார்த்திக் முகத்திற்கு ஆருகே சென்று கூறினார்,
"சார்! அங்க பாருங்க. கேமரா இருக்கு. கொஞ்சம் சிரிச்ச மாதிரியே
கை காமிங்க பார்க்கலாம். இது dash TV-யோட காமெடி program".

முரளி
05-02-2013, 03:45 AM
அழகான சிறிய அரைபக்க கதை. தங்கள் வியாபாரத்திற்காக எரிச்சல்லூட்டும் இந்த மாதிரி

'கேண்டிட் கேமரா' (நேர் கோணல் - மற்றவர் நேர கோணல்) நிகழ்ச்சிகள் பற்றி மிக அழகாக சொன்னீர்கள்.

அது சரி, கார்த்திக் இந்த நேர் காணல் போனானா? அல்லது இந்த வேலையும் கானல்தானா? அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள் !

ஆங்கில வார்த்தைகளை கொஞ்சம் குறைத்தால், குங்குமம் குமுதம் இதழ்களில் முயற்சி செய்யலாமே?

arun karthik
07-02-2013, 12:45 PM
தங்களது மதிப்பு மிகுந்த பின்னூட்டத்திற்கு நன்றி .
கார்த்திக் இந்த 15-வது நேர் காணலுக்கும் போகவில்லை.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஆங்கிலம் அதிகம் பயன் படுத்த வேண்டியதாயிற்று .
இனி குறைத்து கொள்கிறேன் .

jayanth
08-02-2013, 02:35 AM
நம்மூர் தொ(ல்)லைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் சிரிப்பை வரவழைப்பதை விட எரிச்சலைதான் அதிகம் வரவழைக்கின்றது...

மும்பை நாதன்
01-09-2013, 04:46 PM
சில மணித்துளிகள் ஒளிபரப்புவதற்காக சம்பந்தப்பட்டவர்களின் நிலைமையை பற்றி கவலைப்படாமல் இம்மாதிரி செயல்களில் ஈடு படுபவர்களுக்கு தண்டனை தர ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.

கதையின் கருத்து நன்று.

ஆங்கில வார்த்தைகளை குறைப்பது இன்னும் மெருகேற்றும்.

பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்

arun karthik
07-09-2013, 07:14 PM
மும்பை நாதன் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்... தொடர்ந்து எழுதுகையில் முடிந்த அளவு குறைத்துக் கொள்கிறேன்...