PDA

View Full Version : மாமியாரின் அதட்டல் ஆரம்பம்!!!!



nandagopal.d
01-02-2013, 05:24 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU1DV8IZfEHdLo2ZjTzLtM8jzE2SuIezmYURwqxuVj4vcHbbzE


நான்கு சிநேகிதிகளில்
ஒருத்தியை,
காதலிப்பதாக,
அம்மாவிடம் சொன்னேன்.
சரி, வீட்டுக்கு,
கூட்டி வா என்றாள்.

அதற்கு முன்பே அம்மாவிடம் கூறினேன்.
கூட்டி கொண்டு வரும்,
நான்கு தோழிகளில்,

ஒருத்திதான் உன் மருமகள்
அதை நீயே கண்டுபிடி என்றேன்.

அவர்களும் வந்தார்கள்.
ஆனாலும்,

சரியாய் சொன்னாள்,
என் காதலியை,

எப்படியம்மா,
சரியாய்,
சொன்னாய்.

அம்மா சொன்னாள்

அந்த நான்கு பேரில்,
அவளை மட்டும்தான்,
எனக்கு பிடிக்கவில்லை என்று???????

கீதம்
02-02-2013, 11:47 PM
கவிதைக்குள் ஒரு சின்ன கதை லாஜிக்கோடு. மனிதரின் குணவியல்புகள் எத்தனைதான் மறைக்க முயன்றாலும் அதிசயிக்கத்தக்க விதத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன. மருமகளாய் வரவிருப்பவளைப் பற்றிய அம்மாவின் கணிப்பு மிகச்சரியாக சாத்தியமானது எப்படி? நால்வரில் ஒருத்தி மட்டும் தன்னிடம் காட்டிய அலட்சியம் அல்லது அதீத கரிசனம், மகனோடு இழையும் அவளது சிநேகம் தாண்டிய நடவடிக்கைகளின் துல்லிய கவனிப்பு இப்படி எதுவாகவும் இருக்கலாம்...

ஆனாலும் மாமியார் மருமகள் என்றாலே உறவு என்றைக்கும் இழுபறியாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? வருங்காலத்திலாவது அது நலமாய் மாறும் என்று நம்புவோம், மாற்ற முயல்வோம்!

கவிதைக்குப் பாராட்டுகள் நந்தகோபால். தொடர்ந்து எழுதுங்கள். தலைப்பை இன்னும் பொருத்தமாய் வைத்திருக்கலாம்.

veruppuvijay
06-02-2013, 02:33 PM
கவிதை, அதற்கான பின்னூட்டம், இரண்டுமே பிரமாதம்.. குறிப்பாய் பின்னூட்டம்.