PDA

View Full Version : ஏழுவகையான பெண்கள்

nandagopal.d
31-01-2013, 05:45 PM
http://2.bp.blogspot.com/-J7EwvljEp54/T4RVdzQ01jI/AAAAAAAAAro/QH-3EO6MX58/s1600/oviyam.JPG

தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன.
நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய பேதைப் பருவம்
எட்டு முதல் பதினொன்று முடிய பெதும்பைப் பருவம்..
பன்னிரெண்டும்,பதிமூன்றும் மங்கைப் பருவம்.
பதினான்கு முதல் பத்தொன்பது முடிய மடந்தை.
இருபது முதல் இருபத்தைந்து முடிய அரிவை.
இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது முடிய தெரிவைப் பருவம்.
நாற்பது முதல் பேரிளம்பெண்.

கீதம்
31-01-2013, 09:13 PM
பகிர்வுக்கு நன்றிங்க நந்தகோபால். இதுபோல் ஆண்களுக்கும் ஏழுவகைப் பருவங்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனவாம்.

பாலன் - ஒன்று முதல் ஏழு வயது வரை
மீளி - எட்டு முதல் பத்து வயது வரை
மறவோன் - பதினொன்று முதல் பதினான்கு வயது வரை
திறவோன் - பதினைந்து வயது
விடலை - பதினாறு வயது
காளை - பதினேழு முதல் முப்பது வயது வரை
முதுமகன் - முப்பதுக்கு மேல்

ஜான்
01-02-2013, 12:34 AM

அப்படி என்றால் கூந்தல் சந்தேகம் வந்த பாண்டிய மன்னன் மனைவிக்கு வயது 20-25

எப்படி ஆராய்ச்சி

ஜான்
01-02-2013, 12:35 AM
பகிர்வுக்கு நன்றிங்க நந்தகோபால். இதுபோல் ஆண்களுக்கும் ஏழுவகைப் பருவங்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனவாம்.

பாலன் - ஒன்று முதல் ஏழு வயது வரை
மீளி - எட்டு முதல் பத்து வயது வரை
மறவோன் - பதினொன்று முதல் பதினான்கு வயது வரை
திறவோன் - பதினைந்து வயது
விடலை - பதினாறு வயது
காளை - பதினேழு முதல் முப்பது வயது வரை
முதுமகன் - முப்பதுக்கு மேல்

புதிய செய்தி..(எனக்கு)..நன்றி கீதம்

arun
01-02-2013, 04:06 PM
நல்லதொரு பகிர்வு பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்