PDA

View Full Version : மாத இறுதி



arun karthik
31-01-2013, 03:49 PM
மாத இறுதி,
கையைக் கடிக்கிறது -
அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த மோதிரம்...

M.Jagadeesan
31-01-2013, 04:10 PM
நல்ல ஹைக்கூ கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

இராஜிசங்கர்
01-02-2013, 04:20 AM
மாத இறுதி,
கையைக் கடிக்கிறது -
அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த மோதிரம்...

மாத இறுதி,
கண்ணை உறுத்துகிறது -
கடன்பட்டவன் கையில் உள்ள மோதிரம்!

இது எப்டி இருக்கு?

இராஜிசங்கர்
01-02-2013, 04:22 AM
மாத இறுதி,
கையைக் கடிக்கிறது -
அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த மோதிரம்...

:icon_b:

முரளி
01-02-2013, 08:51 AM
மாத இறுதி,
கையைக் கடிக்கிறது -
அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த மோதிரம்...

அருமை. சுருங்க சொல்லி சிரிக்க வைத்த ஹைக்கூ கவிதை. :icon_b:

ஜான்
02-02-2013, 12:52 AM
தொடர்ந்து எழுதுங்கள் அருண் கார்த்திக்

HEMA BALAJI
02-02-2013, 11:59 AM
நன்று கார்த்திக். தொடர்ந்து பகிருங்கள்.

ஜானகி
02-02-2013, 12:14 PM
நெருக்கடி கடிக்கும்போது வலிக்கத்தான் செய்யும்...'.நறுக்' கடி !

arun karthik
02-02-2013, 03:49 PM
மாத இறுதி,
கண்ணை உறுத்துகிறது -
கடன்பட்டவன் கையில் உள்ள மோதிரம்!

இது எப்டி இருக்கு?
அட . இது கூட நல்ல இருக்கே !

arun karthik
02-02-2013, 03:50 PM
அனைவருக்கும் நன்றிகள்!

ராஜா
07-03-2013, 01:03 PM
ஹா..ஹா..!

நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட அவலச்சுவைக் கவிதை..

பாராட்டுகள் கார்த்திக்..!

மதி
12-03-2013, 06:02 AM
மோதிரம் வாங்குவதே அவசரத்திற்கு அடகுவைக்கத் தானே..

நல்ல கவிதை அருண்

சிவா.ஜி
12-03-2013, 08:26 AM
மூன்று வரிகளில் நிஜமுணர்த்தியக் கவிதை. அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் அருண் கார்த்திக்.

rema
18-03-2013, 04:28 AM
நடுத்தர வர்க்கம்

புது செருப்பு வாங்கினேன்
கையை கடித்தது செலவு
காலை கடித்தது செருப்பு...

இராஜிசங்கர்
18-03-2013, 04:39 AM
நடுத்தர வர்க்கம்

புது செருப்பு வாங்கினேன்
கையை கடித்தது செலவு
காலை கடித்தது செலவு..

ரீமா, காலைக் கடித்தது 'செருப்பு' என சொல்ல விழைந்தீர்கள் என்று நினைக்கிறேன்..டைப்போ எரர்

dellas
18-03-2013, 07:44 AM
ஏன்..என்னாச்சு ...விரலிடுக்கில் அழுக்கு சேர்ந்து விட்டிருக்கும் ...கழட்டிவிடுங்கள் மோதிரத்தை, விரல் முக்கியம்.

நன்று ..

rema
20-03-2013, 10:50 AM
திருத்திவிட்டேன் dellas
!! நன்றி !!