PDA

View Full Version : ஏ கணினிக்காதலி - கனி நீ என் காதலி!



arun karthik
26-01-2013, 09:38 AM
அதிகாலை துயில் கலைந்து ,
காதல் மையை என் விரல்களில் தடவி
நான் தினமும் எழுதும், முதல் கவிதை
உன் பெயரன்றோ?!
************************************

விசைப்பலகையில் என் கைகள் கதைப்பதை
நீ உணரும்போது கொள்ளும் வெட்கம், அடடா
என்னை உயிரோடு கொல்லும் வெட்கம் !
************************************

எப்போதும் வெட்டியாக நாம் அடித்த அரட்டைகள் தாம்
ஒரு நாள் நம் காதல் வெற்றியின் வரலாறு !
நாம் இருவரும் சந்திக்கா விட்டாலும்
நம் மனம் நம்மைத் தேடி அலையும்,
கரப்பான் பூச்சியின் நுகர்ச்சிக் கதுப்புகளாய்!
****************************************

காதலியை தினமும் காண்பவனுக்கு
நிலவு மட்டுமே உருவகம் !
இதுவரை உன்னைக் காணாத எனக்கு
நிலவும் ஒரு உருவகம்!
****************************************

பேச்சை ஊடகமாகக் கொண்ட காதல்கள்
பேசாமல் அழிந்தாலும்,
எழுத்தை ஊடகமாகக் கொண்ட நம் காதல்
அழியாது - நமக்குப் பார்வை இருக்கும் வரை!
****************************************

vasikaran.g
02-02-2013, 05:11 AM
கணனி காதல் ..
ஹைக்கூ கவிதை !
நீளம் குறைவு ,
நின்று கவனித்தால்
ஆழம் தெரியும் !
மேலோட்டமாய் பார்த்தால்
ஆழம் குறைவு !