PDA

View Full Version : மழை வேண்டி பிரார்த்தனை!



arun karthik
26-01-2013, 08:39 AM
மரங்களை வெட்டி கோவில்
அமைத்து,
கடல் தனை திருடி தீர்த்தம்
சமைத்து ,
மலையினை செதுக்கி சிற்பம்
செய்து ,
புவியின் வெப்பத்தை
ஆராதனை காட்டி,
வேண்டுகிறோம்
"இறைவா !மழை தருவாய்!"-
என்று...

கீதம்
26-01-2013, 10:11 PM
உலகவெப்பமயமாதல் பற்றிய பிரக்ஞை அற்று இன்னும் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கும் அநேக நடவடிக்கைகளில் கோயில்களை மட்டும் குறிப்பிட்டு உரைப்பது சற்றே உறுத்தினாலும், வாழ்வாதாராத்தை அழித்து அதே வாழ்வாதாரத்தை வேண்டி நிற்கும் மனிதரின் அறியாமை பற்றிய கவிதைக்கருத்து சுள்ளென உறைக்கிறது. அருமை. பாராட்டுகள்.

arun karthik
27-01-2013, 07:11 AM
மனிதரின் அறியாமையை சுட்டி காட்ட மட்டுமே இவ்வாறு உருவகிதேன். பிழை இருப்பின் மனிக்கவும்

மஞ்சுபாஷிணி
27-01-2013, 09:43 AM
மரங்களை வெட்டி இருப்பிடம் அமைத்துக்கொண்டு....

மனிதர்கள் தன் சௌகர்யத்துக்காக இயற்கையை அழித்துக்கொண்டு...

பின் நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....

ராஜா
07-03-2013, 01:06 PM
நீருக்கு இறையை வேண்டும் வழி பற்றி மிக அருமையாக கவிதையில் சொன்னது அருமை....

:violent-smiley-010:

சுகந்தப்ரீதன்
08-03-2013, 03:57 PM
விழியை விற்று சித்திரம் வாங்கும் விசித்திர உலகமப்பா...!!

நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை... வாழ்த்துக்கள்..அருண்..!!:icon_b: