PDA

View Full Version : இறைந்து கிடக்கின்ற என் கரிய நீர்(கருப்பு பெண்ணின் கண்ணீர்)



nandagopal.d
25-01-2013, 04:46 PM
http://4.bp.blogspot.com/-B0rOkgY_LgI/UQAjF8-djEI/AAAAAAAAAGE/g8noNfvxgFI/s1600/images+(63).jpg


கருமை நிறம் தூளக்கப்பட்டது
கரிய எண்ணம் துகள் துகளாய்
சிறைபடுத்துகிறது சிறகின்றி
என்னை
பஸ் நிறுத்தங்களின் பாதையை
கடக்கும் பொழுது எல்லாம்
கூட படிக்கும் பையன்களிடம் இருந்த
ஒரு வித அழைப்பு
"கரி பால்ட்டி போகுதடா" என்ற,
ஏளன வார்த்தையின் கேலியை கேட்டு
விழியோரம் வழியும்,கண்ணீரில்,என் கனத்த இதயம்
ஒளியை தேடும் மனிதர்களின் மத்தியில்
இருளையே துணையாக்கி கொண்டேன்.
என் விதவிதமான வண்ண கனவுகளின்,
முடிவில் எங்கும் நிறைந்திருக்கு கறுப்பு
நித்தம் நித்தம் நினைவுகள் கூட
களைப்பிலும் கவலையிலும் .
உருண்டு ஓடுகிறது ஒரு பாறை போல
கருவறையும் கறுப்புதான் கல்லறையும் கறுப்புதான் என்பதை
எத்தனை கவிஞ்சனும் சிந்தனைவாதியும் சொன்னாலும் திருந்தாத
மானிடர்களை எண்ணியும்
என் கறுப்புக்கு பெற்றவர்கள்தான் காரணம் என்று
எண்ணியும் ,அறிவில்லமால்
அவர்களை திட்டி கொண்டு யாரும் பாரவண்ணம்
நான் நடக்கையில்
(வெள்ளை வெளிரான)தோல் நோயின்,
தம்பதிகளின் கையில்,
களையான ஒரு குழந்தை என்னை போல

ஜான்
26-01-2013, 12:34 AM
கருமை என்பது கொண்டாடப்பட்ட காலம் உண்டு!!!

சிறுமை என இழிக்கப்பட்டது அன்னியர் வருகையால்

நன்று நந்தகோபால்

ஆனால் பால் பொங்குவது மகிழ்ச்சியின் அடையாளமாகத்தானே கொள்ளப்படும்?

nandagopal.d
26-01-2013, 05:36 PM
நண்பர் ஜானுக்கு நன்றிகள்.
நண்பரே இப்பொழுது இந்த பதிவை சிறிது மாற்றம் செய்துள்ளேன் பார்க்கவும்.
படித்து விட்டு தங்களின் மேன்மையான கருத்தை சொல்லவும்