PDA

View Full Version : விண்ணில் நாள்களைக் காணுங்கள்



tnkesaven
25-01-2013, 02:43 PM
விண்ணில் நாள்களைக் காணுங்கள்

இரவு எட்டுமணிக்கெல்லாம் தலைக்குமேலே ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் காணலாம்.
அது உண்மையில் நட்சத்திரமன்று. வியாழன் கோள்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கும் ரோகிணி நட்சத்திரத்திற்கும் இடையே வியாழன்
(வக்ரத்தில்) உள்ளதைக் காணலாம். பைனாக்குளர் வழியாகப் பார்த்தால்
அரைவட்டவடிவில் (சிறிய அப்பளத்தைப் பாதியாக உடைத்தால் எப்படியிருக்குமோ
அப்படி) காணலாம்.

அதேபோல் அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது, தலைக்குமேலே ஒரு சிறிய மங்கலான
நட்சத்திரத்தைக் காணலாம். அதுவும் நட்சத்திரமன்று. சனி கோள்

வியாழன் இப்போது வக்ரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தை 24 (6 பிப்ரவரி 2013) அன்று வியாழன் வக்ரநிவர்த்தியாகிவிடும்.
அதன்பிறகு வியாழன் அதிசாரத்தில் கிழக்கு நோக்கி வேகமாகப் பயணிப்பதைக் காணலாம்.
ரோகிணியைத் தாண்டும் வரை வேகம் அதிகமாக (அதிசாரம்) இருக்கும். பின்னர்
வழக்கமான வேகத்தில் பயணிக்கும்.
தொடர்ந்து அவதானித்து வந்தால் மிகவும் பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருக்கும்.

ஜான்
25-01-2013, 03:34 PM
என் சந்தேகம் தீர்ந்தது ...காலையில் கிழக்கில் இருப்பது மெர்க்குரி என நினைத்தேன் !!!

நன்றி கேசவன்