PDA

View Full Version : எனக்கு மா சம்பத்து"

tnkesaven
25-01-2013, 02:39 PM
ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர்.

“உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு,
டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

மா =இலக்குமி/செல்வம்/

M.Jagadeesan
25-01-2013, 11:49 PM
ரசிகமணியின் சிலேடை நயம் பாராட்டத்தக்கது,

M.Jagadeesan
25-01-2013, 11:51 PM
ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர்.

“உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு,
டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

மா =இலக்குமி/செல்வம்/

மா= பெரிய
சம்பத்து= செல்வம்.

அமரன்
26-01-2013, 08:44 AM
எனக்குமா SUM பத்து? என்றும் நினைச்சிருப்பாரோ..

மஞ்சுபாஷிணி
27-01-2013, 09:41 AM
ரசிக்கவைத்த சிலேடை பகிர்வு....

ஜான்
31-01-2013, 12:57 AM
:)நிறைந்த சம்பத்து பெற்றவர் மஞ்சு !!!!!?????!!!!!