PDA

View Full Version : நினைவில் நிற்கும் சில குறட்பாக்கள்.



M.Jagadeesan
25-01-2013, 12:21 PM
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு- 341 )

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. ( வான்சிறப்பு-12 )


இவ்விரண்டு குறட்பாக்களுக்கும் தனிச் சிறப்பு உள்ளது.

முதல் குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டாது; ஆனால் இரண்டாவது குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டும்.

துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டாத முதல் குறளை வள்ளுவர் அமைத்தாரோ ?

வான்சிறப்பு மழையைக் குறிப்பதாகும். பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் உதடுகள் ஒட்டும் இரண்டாவது குறளை அமைத்தாரோ ?

வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !