PDA

View Full Version : ஊனமா ? மானமா ?



M.Jagadeesan
20-01-2013, 11:04 AM
ஊனத்தை முதலாக வைத்து
ஏனம் ஏந்தி பிச்சை எடுக்கும்
ஈனப் பிறவியே ! உனக்கு
மானம் என்பது இல்லையா ?

பொறியின்மை பழியன்று
ஆள்வினை இன்மையே பழியென்று
அய்யன் வள்ளுவன்
அன்றே மொழிந்தானே !

காலிரண்டும் இல்லையெனில்
கையிரண்டும் உள்ளனவே
உழைத்துப் பிழைப்பதற்கு !

கையிரண்டும் இல்லையெனில்
வாயொன்று உள்ளதுவே
பாடிப் பிழைப்பதற்கு.

காலிழந்து கையிழந்து
கண்ணிழந்து செவியிழந்து
வயிறு மட்டும் இருந்திட்டால்

பிச்சை எடு; தவறில்லை
உன்குற்றம் அங்கில்லை !
உனைப் பெற்ற தாயும்
தவறேதும் செய்யவில்லை !
இறை செய்த குற்றமே நீ
இங்கு வந்து பிறந்தது !