PDA

View Full Version : அழகும் ஆபத்தும்



M.Jagadeesan
19-01-2013, 09:11 AM
அழகான ரோஜாப்பூவின் கீழேதான்
ஆபத்துக் காத்திருக்கிறது.

படமெடுத்தாடும் நாகம் கூடப்
பார்ப்பதற்கு அழகுதான் !

அழகான முத்துக்கள்
ஆபத்து நிறைந்த
ஆழ்கடலில் அல்லவா
தூங்கிக்கொண்டு இருக்கின்றன !

சுருண்டுவரும் சுனாமி
அலைகளில்தான்
எத்தனை அழகு !

அழகிருக்கும் இடமெல்லாம்
ஆபத்தும் இருக்குமோ ?

அன்பே நீ ! அழகாக இருக்கிறாய் !
ஆகவே உன்னைவிட்டு சற்று
விலகியே செல்கிறேன் !

கும்பகோணத்துப்பிள்ளை
19-01-2013, 06:08 PM
ஆபத்துகளைத்தாண்டி அடைவதெல்லாம் அழகுதானே அய்யா!

மஞ்சுபாஷிணி
20-01-2013, 08:52 AM
அழகைக்கண்டு ஆராதிக்க முற்படாமல் அதில் இருக்கும் இடர்களை கண்டு ஒதுங்கியது போன்று கவிதை வரிகளை அமைத்தது அழகு ஐயா... அன்பு வாழ்த்துகள்....

அம்பாளும் அழகு....

அம்மாவும் அழகு....

பெற்றெடுத்தக்குழந்தையின்

பட்டுக்கன்னமும் அழகு.....

இப்போது பிறந்த

கன்னுக்குட்டியின்

கண்சிமிட்டலும் அழகு....

சொக்கித்தான் போனேன்....

பாசாங்கற்ற இந்த அழகில்.....

M.Jagadeesan
20-01-2013, 10:35 AM
சுபாஷிணியின் பாராட்டுக்கு நன்றி !

கலைவேந்தன்
26-01-2013, 06:49 AM
அழகு இருக்குமிடம் ஆபத்தும் இருக்கும் தான். ஆனால் எல்லா அழகுமே ஆபத்துகளில்லை. சிறிய முரண் தெறித்தாலும் சீரிய வரிகளால் அழகுறக் கவிதை படைத்த ஐயாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.