PDA

View Full Version : இம்மை - மறுமை



tnkesaven
17-01-2013, 02:31 PM
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.

அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள்.

அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

M.Jagadeesan
17-01-2013, 11:43 PM
கி.வா.ஜ வின் சிலேடைகள் என்றுமே ரசிக்கத்தக்கவை. பகிர்ந்தமைக்கு நன்றி!

தாமரை
18-01-2013, 06:21 AM
இம்மைக்கும் சரியில்லை.. மறுமைக்கும் சரியில்லை, எம்மைக்கும் சரியில்லை...

ஹ ஹ ஹ ..

கும்பகோணத்துப்பிள்ளை
18-01-2013, 06:37 PM
மைக்கில் வார்தை ஜாலம்!