PDA

View Full Version : மார்கழியின் அழகு



A Thainis
17-01-2013, 06:47 AM
கறுப்புச் சேலைக்குள்
கண்ணயர்ந்த மார்கழியின் அழகு
ஆதவன் கண் பட்டதும்
மின்னிடும் அழகில்
வெள்ளிச் சிரிப்பில் தன்னை
உடுத்திக்கொண்ட குளிர்மேகம் ஒன்று
தரை தட்டியதுப் போல்
பூமியின் நெஞ்சத்தில் முகம் பொதிந்து
வெண்ணிறக் கோலத்தில்
தன் வெட்கத்தை காட்டிய
அந்த குளிர்பூக்கள் - என்
விழியின் ஒளியை
ஈரக்காற்றில் நனைத்திட
பாதம்கூட அந்த பரவசத்தில்
அந்தரத்தில் இன்ப நடனமிட்டது