PDA

View Full Version : இனி எல்லாமே மின் வணிகம் (E-Commerce) - 2



lavanya
11-01-2004, 07:15 PM
மின் வணிகத்தில் பண பரிமாற்றம்

ஓர் இணைய அங்காடியில் பொருளை தேர்வு செய்து நீங்கள் வேண்டும் பொருளை கேட்கிற போது விற்பனை நிறுவனம் அப்பொருளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது.அப்போது
பொருளுக்குரிய விலையை செலுத்தி விடலாம்.இதை விநியோகத்தின் போது பணம் செலுத்தும் முறை ( Cash on Delivary) என்கிறோம்.இது மிகப்பழைய முறை. இப்போது மின்
வணிகத்தில் பணப்பரிமாற்றத்துக்காக பல நவீன முறைகள் பின்படுத்தப்படுகின்றன.
இவற்றுள் மூன்று முக்கியமான முறைகள் உள்ளன.
1.Credit Card 2. Smart Card 3. Digital money.

இவற்றுள் மிகப் பரவலாக இப்போது பயன்பாட்டில் உள்ள முறை Credit Card என்னும் பண அட்டை முறை ஆகும்.இம்முறையில் ஐந்து தரப்பினர் பங்கு பெறுகின்றனர்.

1. Credit Card வைத்திருப்போர். ( நுகர்வோர்)

2. Credit Card - ஐ வழங்கும் வங்கி

3. பொருளை விற்பனை செய்யும் நிறுவனம்

4. பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு படுத்தும் நிதி நிர்வாக குழு ( Payment Gateway)

5. விற்பனையாளர்/நுகர்வோர் ஆகியோர் கணக்கு வைத்திருக்கும் வங்கி

எப்படி நடக்கிறது இணைய வணிகம்...?


பண அட்டை வைத்திருக்கும் ஒருவர் இணைய அங்காடியில் பொருள்களை பார்வையிட்டு
தேவையானவற்றை ஒரு தள்ளுவண்டி சின்னத்தில் (Cart Icon) போட்டவுடன் கொள்முதல்
கோரிக்கை தயாராகி விடும். submit என்னும் பட்டனை அழுத்தியவுடன் கோரிக்கையானது
அந்த விற்பனை நிறுவன பிணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.அடுத்து தன்னுடைய பண
அட்டை விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.அங்கே நுகர்வோர் பண அட்டையின்
அடையாளம் மற்றும் பண இருப்பு பரிசோதிக்கப்பட்டு அத்தகவல் நிதி நிர்வாக பிணைய
கணிணி உறுதிபடுத்தி விற்பனை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.நுகர்வோரின்
திரையில் விற்பனை நிறுவனத்தின் ஏற்புகோடல் (Received Message) காட்டப்படும்.ஆனால்
இத்தனையும் ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து விடும்.

விற்பனை நிறுவனம் அதன்பின் பொருள்களை நுகர்வோரின் வீட்டு முகவரிக்கு அனுப்பி
வைக்கும்.பதிவிறக்கம் (Down Load) செய்ய வேண்டிய பொருளாக இருப்பின் உடனே
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொருள் அனுப்பி வைக்கப்பட்ட செய்தியை விற்பனை
நிறுவனம் நிதி நிர்வாக பிணைய குழுவுக்கு அனுப்பி வைக்கும்.உடனே பணம் செலுத்துமாறு
பண அட்டை வங்கிக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்.பணப்பரிமாற்ற ஒப்புதல் நிதி
நிர்வாகப் பிணையத்திற்கு தெரிவிக்கப்படும்.நிதி நிர்வாகப் பிணையம் அத்தொகையை
விற்பனை நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கும்.இவ்வாறு பணப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்துக்கு Secured Electronic Transaction (SET) என்று பெயர்.

பாதுகாப்பான தகவல் பரிமாற்றம்
VAN பிணையம் வழியாக நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் ஓரளவு பாதுகாப்பானவை. ஆனால் இணையம் என்பது ஒரு திறந்த நிலை பிணையம்.எனவே இணையம் வழி அனுப்பப்
படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பான முறையில் சென்று சேர தனிச்சிறப்பான வழி
முறைகள் பின்பற்றப்பட வேண்டும்...

இணையம் மூலம் அனுப்பபடும் தகவல்களை மறைக்குறியீடுகளாக மாற்றியனுப்பும்
தொழில் நுட்பத்திற்கு Cryptography என்று பெயர்.இந்த மறைமுக குறியீட்டு முறையில்
இரண்டு வகைகள் உள்ளன.

1.ஒத்திசைவு குறியீட்டு முறை (Symmetric Cryptography)

2.ஒத்திசையா குறியீட்டு முறை (Asymmetric Cryptography)

முதலாவது முறையில் எந்த மறைக்குறி (Secret Key) மூலம் மறைமுக ஆவணமாக
மாற்றுகிறீர்களோ அதே முறையில்தான் தகவலை மீண்டும் கொண்டுவர முடியும்.

இரண்டாவது முறையில் ஒரு தனிப்பட்ட மறைக்குறி (Private Secret Key) மூலம் ஆவணத்தை மறைமுக ஆவணமாக மாற்ற வேண்டும். அந்த முறைக்குறிய பொதுமறை
குறி (Public Secret Key) ஐப் பயன்படுத்தி மூல தகவலை திரும்ப பெறமுடியும்.

ஒவ்வொரு எழுத்தையும் வேறொரு எழுத்தாக மாற்றி எழுதும் மறை எழுத்து (Cliphers
Method) மற்றும் ஒவ்வொரு சொல்லையும் வேறொரு சொல்லாக எழுதும் மறை சொல் முறையும் (Code Method) முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது..( பார்க்க இன்றைய
கேட்டவை
http://www.tamilmantram.com/board/viewtopi...pic.php?t=3159) (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3159))

1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக வணிக நடைமுறையில் ஒத்திசைவு குறியீட்டு
முறையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது.இம்முறைக்கு தகவல் மறையாக்க முறை (Data
Encryption System - DES) என்று பெயர்.

தற்போது நுண் தகவல் மறையாக்க வரைவு (Integrated Data Encryption Algorithms -IDEA) என்கிற இன்னொரு மறைக்குறியீட்டு முறையும் பயன்பாட்டில் உள்ளது, 1986 - ல்
உருவான மற்றொரு வகை மறைக்குறியீடு முறையான தகவல் சான்றுமுறை குறியீடு என்ற
Message Authentification Code (MAC) ம் சிறந்து விளங்கியது.

இப்போது மிகப்பரவலாக உள்ள மறைக்குறியீட்டு முறையை 1978 - ல் ரான் ரைவெஸ்ட்,
ஷாதிஷமர் லென் அடில்மேன் ஆகிய மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள்.இதற்கு RSA
என்று பெயர். இந்த பெயரின் வரும் மூன்றெழுத்தும் இதை உருவாக்கிய மூவரின் பெயருடைய முதல் எழுத்துக்களே. இம்முறை ஒத்திசையா மறைக்குறியீட்டில் அடங்கும்.

இத்தகைய்ய மறைக்குறியீட்டு முறைகளினால் தகவலின் மறைமுக தன்மை (Confidentiality),நம்பகத்தன்மை (Integrity),சான்றுறுதி (Authenticity) மற்றும் மறுதலிக்க
இயலாமை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

இது மட்டுமன்றி ஒரு ஆவணத்தை மறைக்குறியீடாகப் பயன்படுத்தப்படும் மறைக்
குறிகள் ஒருவகையில் துடிம கையெழுத்தாகவே (Digital Signature) பயன்படுகின்றன.
பல நாட்டு இணைய வழி சட்டங்களும் ( Cyber Law) இத்தகைய்ய துடிம கையொப்பங்களை
அங்கீகாரம் செய்துள்ளன.

மரபு வழியிலான வியாபாரத்துக்கு முற்றிலும் மாறுபட்டது மின் வணிகம்.பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கு பல வழி முறைகள் உள்ள போதிலும் இதிலேற்படும் சட்ட
சிக்கல்கள் பெரும்பாலும் மின் வணிகத்துக்கு சவாலாகவே உள்ளன.

அதைப் பற்றி அடுத்து பார்ப்போம் (இன்னும் வளரும்)

இளசு
11-01-2004, 10:19 PM
மிகத்தெளிவான கட்டுரை.

மின்வணிகம், மின்வங்கிக்கணக்குகளில்
மறைக்குறியீடுகள், துடிமக்கையெழுத்துகள் பற்றி இன்றுதான் கற்றேன்.

போற்றுதலுக்குரிய அரும்பணி உமது லாவ்.

பாராட்டும், நன்றியும்.

சரா அவர்கள் சொன்னதுபோல் இவ்வகைப் பதிவுகளுக்கு ஆதரவு அவ்வளவு
இல்லாதது கவலை அளிக்கிறது.

puppy
12-01-2004, 04:22 PM
கொடுங்க லாவ்..மொத்தமா படிச்சுட்டு என் பதிலை சொல்றேன்.....இங்கேயும் VAN சொல்றீங்க...அப்படி ஒன்னு இல்லே......கொஞ்சம் செக் பண்ணிக்குங்க....

பாரதி
12-01-2004, 05:44 PM
2,3 தடவை படிக்கணும் லாவ். மனதில பதிய வச்சுக்கணும்... சொல்லுங்க... சொல்லுங்க..

lavanya
12-01-2004, 07:47 PM
கொடுங்க லாவ்..மொத்தமா படிச்சுட்டு என் பதிலை சொல்றேன்.....இங்கேயும் VAN சொல்றீங்க...அப்படி ஒன்னு இல்லே......கொஞ்சம் செக் பண்ணிக்குங்க....

நன்றி பப்பி....இந்த வார்த்தைப் பிரயோகம் இப்போது எங்கும் இல்லை...பொதுவாக குறிப்பிடும் பதம் இது...இதுபற்றி உங்கள் கேள்விக்கு முதல் பாகத்திலும் பதில் தந்திருக்கிறேன்..

இளசு
12-01-2004, 09:58 PM
சில சொற்கள் நமக்காக காத்திருக்கும்..
அறிய ஒருவர் தந்த பின் அடுத்த நாளே கண்ணில் படும்..

இன்று அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் விசா தொடர்பாய்
பதிவிறக்கம் செய்ய முற்பட்ட போது
உங்கள் பிரவுசர் 128 bit Encryption சப்போர்ட் செய்யும்படி இருக்க வேண்டும் எனப்படித்தேன்..

நேற்றுவரை அது ஒரு சொல்..
இன்று அது நானறிந்த தகவல்..

நன்றி லாவ்..

poo
14-01-2004, 03:10 PM
நிறைய தெரிந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சி!!