PDA

View Full Version : துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுகின்றன



jaffy
14-01-2013, 11:50 AM
அவள் அறிந்திருக்கவில்லை
யாதொரு பெண்களிடத்தும்
கூறுவது போலத்தான்
அவன் தன்னையும் அழகியென்று
வர்ணித்தானென

அவள் அறிந்திருக்கவில்லை
பிறபெண்களிடத்தை போலவே
தன்னிடமும் மயக்க மொழி பேசினானெ

அவள் அறிந்திருக்கவில்லை
மற்றவர்களிடத்தை போலவே
தன்னிட்டமும் காதல் சொன்னானென

அவள் அறிந்திருக்கவில்லை
தன்னை போலவே
மற்றவர்களையும் மனையாளென
அழைத்தானென

அவள் அறிந்திருக்கவில்லை
இவ்வாறே பிறப்பெண்டீரிடமும்
சரசப்பேச்சுக்களை நிகழ்த்தினானென

அவள் அவனை நம்பினாள்
ஒரு மாசற்ற குழந்தையென

அவள் அவன் கைகளை பற்றிக் கொண்டாள்
அனாதரவான தருணத்தில் நீளும் கைகளென

அவள் ஒரு வளர்ப்பு பிராணியை போலவே
அவன் கட்டளைகளுக்கெல்லாம் இணங்கினாள்
இசைந்தாள், இயங்கினாள், குழைந்தாள், குலைந்தாள்

தன் இச்சையை மீதமின்றி
அவன் தீர்த்து கொண்டு
அவளை தவிர்க்க ஆரம்பித்த தருணத்தில்
உணர்ந்தாள் தான் ஏமாற்றப்பட்டதை
தான் வஞ்சிக்கப்பட்டை
தனுக்கு நிகழ்ந்த துரோகத்தை
நயவஞ்சகமாய் தான் வேட்டையாடப்பட்டதை
அவனின் வக்கிரத்தின் வடிகாளாய் தானாக்கப்பட்டதை

அவள் ஆற்றாமையில்
பொங்கினாள் வெடித்தாள் சினந்தாள்
தன் ஒட்டுமொத்த போர்குணத்தையும் திரட்டி
சமரிட்டாள்
சர்ச்சையை மேலழுப்பினாள்

நடுநிலை பொருந்திய பெருந்தன்மைமிக்க
அனைத்து கணவான்களும்
அவளின் காமத்தை குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
சகமனுசிக்கு நிகழ்ந்த துரோகத்தை மறந்து
அவள் பலவீனத்தை விமர்சித்தார்கள்
அவள் தூண்டபட்டதை புறக்கணித்து
அவளை வெட்கம்கெட்டவள் என்றார்கள்
அவள் வேட்டையாடப்பட்டதை மறைத்து
அவளை வஞ்சகி என்று தூற்றினார்கள்
அவள் வஞ்சிக்கப்படதை தூர்த்து

அவள் மிரட்டப்பட்டாள்
வெறுக்கப்பட்டாள், விமர்சிக்கபட்டாள்
விரட்டப்பட்டாள், அடக்கப்பட்டாள்

அவன் தன் துரோகங்கள் எல்லாம்
கண்டறியப்படவில்லை என்று நிம்மதி கொண்டான்
தன் வஞ்சகங்களெல்லாம் யாருமறியாமல்
மறைத்த சாதுர்யங்களையெண்ணி
பெருமிதம் கொண்டான்
அவன் தன் தூயப்பெயர் காப்பாற்றபட்டதை
நம்பிக் கொண்டான்
அவன் இன்னும் பல பெண்களை
தன் வக்கிரத்துக்கு பயன்படுத்த
வாய்ப்பிருப்பதை எண்ணி எக்களித்தான்
தன் களியாட்டங்கள் மேலும் தொடர
தன்னை நம்புவோரையெல்லாம் பயன்படுத்தி கொண்டான்

ஆனால்
அவன் அறிந்திருக்கவில்லை
அவன் தன் மனைவியால் வஞ்சிக்கப்பட்டதை
அவன் குழந்தைகள்
அவனுடையதில்லை என்பதை
அவன் தன் மனைவியை
நெருங்கும் சமயத்திலெல்லாம்
அவள் வேறொரு ஆடவனை நினைத்துக் கொள்வதை

அவன் அறிந்திருக்கவில்லை
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுவதை
வஞ்சனைகள் வஞ்சகங்களால் ஈடு செய்யப்படுவதை
ஏமாற்றுதல்கள் ஏமாற்றுதல்களால் சமனாவதை

prakash01
14-01-2013, 05:04 PM
ஒரு சிலரின் வாழ்கையில் மறைந்திருக்கும் உண்மை

நன்று

கலைவேந்தன்
14-01-2013, 06:53 PM
எப்போதும் ஏமாற்றப்படுபவர்கள் பெண்களாகவும் ஏமாற்றுகிறவர்கள் ஆண்களாகவுமே கவிதைகளிலும் கதைகளிலும் சித்தரிக்கப்படுவதன் நோக்கமென்னவோ..? பெண்ணியம் பறைவதாகக் கூறிக்கொள்ளும் இன்னுமொரு பகட்டுக் கவிதையாகத்தான் எனக்கு தோற்றமளிக்கிறது. வெரி சாரி ஜெஃபி..!

கலைவேந்தன்
14-01-2013, 07:17 PM
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுகின்றன


அவன் அறிந்திருக்கவில்லை
யாதொரு ஆண்களிடத்தும்
கூறுவது போலத்தான்
அவள் தன்னையும் அழகனென்று
வர்ணித்தாளென

அவன் அறிந்திருக்கவில்லை
பிறஆண்களிடத்தை போலவே
தன்னிடமும் மயக்க மொழி பேசினாளென

அவன் அறிந்திருக்கவில்லை
மற்றவர்களிடத்தை போலவே
தன்னிடமும் காதல் சொன்னாளென

அவன் அறிந்திருக்கவில்லை
தன்னை போலவே
மற்றவர்களையும் கண்ணாளனென
அழைத்தாளென

அவன் அறிந்திருக்கவில்லை
இவ்வாறே பிறஆடவரிடமும்
சரசப்பேச்சுக்களை நிகழ்த்தினாளென

அவன் அவளை நம்பினான்
ஒரு மாசற்ற குழந்தையென

அவன் அவள் கைகளை பற்றிக் கொண்டான்
அனாதரவான தருணத்தில் நீளும் கைகளென

அவன் ஒரு வளர்ப்பு பிராணியை போலவே
அவள் கட்டளைகளுக்கெல்லாம் இணங்கினான்
இசைந்தான், இயங்கினான், குழைந்தான், குலைந்தான்

தன் இச்சையை மீதமின்றி
அவள் தீர்த்துக் கொண்டு
அவனை தவிர்க்க ஆரம்பித்த தருணத்தில்
உணர்ந்தான் தான் ஏமாற்றப்பட்டதை
தான் வஞ்சிக்கப்பட்டதை
தனக்கு நிகழ்ந்த துரோகத்தை
நயவஞ்சகமாய் தான் வேட்டையாடப்பட்டதை
அவளின் வக்கிரத்தின் வடிகாலாய் தானாக்கப்பட்டதை

அவன் ஆற்றாமையில்
பொங்கினான் வெடித்தாம் சினந்தான்
தன் ஒட்டுமொத்த போர்குணத்தையும் திரட்டி
சமரிட்டான்
சர்ச்சையை மேலழுப்பினான்

நடுநிலை பொருந்திய பெருந்தன்மைமிக்க
அனைத்து கணவான்களும்
அவனின் காமத்தை குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
சகமனுசனுக்கு நிகழ்ந்த துரோகத்தை மறந்து
அவன் பலவீனத்தை விமர்சித்தார்கள்
அவன் தூண்டபட்டதை புறக்கணித்து
அவனை வெட்கம்கெட்டவன் என்றார்கள்
அவன் வேட்டையாடப்பட்டதை மறைத்து
அவனை வஞ்சகன் என்று தூற்றினார்கள்
அவன் வஞ்சிக்கப்பட்டதை தூர்த்து

அவன் மிரட்டப்பட்டான்
வெறுக்கப்பட்டான், விமர்சிக்கபட்டான்
விரட்டப்பட்டான், அடக்கப்பட்டான்

அவள் தன் துரோகங்கள் எல்லாம்
கண்டறியப்படவில்லை என்று நிம்மதி கொண்டாள்
தன் வஞ்சகங்களெல்லாம் யாருமறியாமல்
மறைத்த சாதுர்யங்களையெண்ணி
பெருமிதம் கொண்டாள்
அவள் தன் தூயப்பெயர் காப்பாற்றப்பட்டதை
நம்பிக் கொண்டாள்
அவள் இன்னும் பல ஆண்களை
தன் வக்கிரத்துக்கு பயன்படுத்த
வாய்ப்பிருப்பதை எண்ணி எக்களித்தாள்
தன் களியாட்டங்கள் மேலும் தொடர
தன்னை நம்புவோரையெல்லாம் பயன்படுத்தி கொண்டாள்

ஆனால்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டதை

அவள் தன் கணவனை
நெருங்கும் சமயத்திலெல்லாம்
அவன் வேறொருத்தியை நினைத்துக் கொள்வதை

அவள் அறிந்திருக்கவில்லை
துரோகங்கள் துரோகங்களால் தண்டிக்கப்படுவதை
வஞ்சனைகள் வஞ்சகங்களால் ஈடு செய்யப்படுவதை
ஏமாற்றுதல்கள் ஏமாற்றுதல்களால் சமனாவதை



இப்படி மாற்றினாலும் மாறாமல் பொருள் தருவதை உணரவைக்கவே இந்த மாற்றங்கள் ஜெஃபி. என்னவோ ஆண்கள் தான் ஏமாற்றுக்காரன்கள் என்றும் பெண்கள் அப்படியே அப்பழுக்கற்றவர்கள் என்பது போல் பொருள் தரும் கவிதைகளை எழுதும் முன் இனி நடுநிலையாக சிந்திக்க வேண்டுகிறேன்.

veruppuvijay
06-02-2013, 02:42 PM
(எனக்கு இந்த நீளமே) கொஞ்சம் பெரிய கவிதைதான்.
இது மிக மிக சிறுபான்மை நிகழ்வு.
எங்கேயோ ஒரு துமியளவு நிகழக்கூடியது. ‘மையப்’படுத்துதனினால் பெரிதாக ரஸம் கெட்டுப் போய்விடவில்லை,
கவிதை கூறும் மையக்கருத்து அவனுக்கு தண்டனையாகப் படவில்லை, ஏனெனில் அடுத்தவரை துண்டாடப்படுதல் ஒரு பொழுதுபோக்கென சுற்றுபவனுக்கு அவனது வரலாறும் பொழுதுபோக்காகவே இருக்கும்.
அல்லது இப்படி பார்க்கலாம்,

அவனது ஏமாற்றுதல் X மனைவியின் ஏமாற்றுதல்
சமனான நிலையில்
அவனுக்கான தண்டனை என்பது கிடையாது.
அதனால்தான் இம்மாதிரி சம்பவங்கள் மிக இயல்பாகவே நடைபெறுகின்றன.
சிலசமயங்களில் இருவரின் ஒத்துழைப்போடும்.

பட்

கவிதை வேறொன்றை சொல்லியிருக்கவேண்டும். அது மிஸ்ஸிங்.

veruppuvijay
06-02-2013, 02:46 PM
இப்படி மாற்றினாலும் மாறாமல் பொருள் தருவதை உணரவைக்கவே இந்த மாற்றங்கள் ஜெஃபி. என்னவோ ஆண்கள் தான் ஏமாற்றுக்காரன்கள் என்றும் பெண்கள் அப்படியே அப்பழுக்கற்றவர்கள் என்பது போல் பொருள் தரும் கவிதைகளை எழுதும் முன் இனி நடுநிலையாக சிந்திக்க வேண்டுகிறேன்.


உங்களுக்காகவே ஒரு கவிதை எழுதுகிறேன்.

உண்மையில் ஆண்கள் ஏமாற்றுக்காரர்களாயிருக்கலாமென அஞ்சுகிறது ஆண்...

00
கவிதை கமிங் soon..